மன்னாரில் மீள் குடியேற்றப்பகுதிகளில் பண்ணை பயிற்சிகள் ஆரம்பிப்பு.(படங்கள் )
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கிராமத்திலும்,மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பண்டிவிருச்சான் கிராமத்திலும் குறித்த பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பனம் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே இதன் நோக்கமாக உள்ளது.
இந்த நிலையில் மீள் குடியேற்றக்கிராமமான அடம்பனில் 30 பேரும்,பண்டிவிரிச்சான் வடக்கில் 25 பேரும்,மேற்கில் 25 பேரும் மொத்தம் 80 பயிற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முதல் மூன்று மாதங்களுக்கு பனை அபிவிருத்திச்சபை அதிகாரிகளினால் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன் போது உற்பத்திப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் வர்த்தக தாய் சம்மேளனம் மேற்கொள்ளும்.
இந்த பயிற்சி நெறியானது ஒக்ஸ்பாம் மற்றும் ஐரோப்பிய யூனியனின் நிதி உதவியுடன் மன்னார் வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக தாய் சம்மேளனம் ஆகியவை இணைந்து அமுல் படுத்தியுள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்விற்கு பனை,தென்னை அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர்,பணிப்பாளர்,வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்,மேலதிக தேசிய முகாமையாளர் நந்தகுமார்,ஒக்ஸ்பாம் திட்ட அலுவலகர்,மன்னார் பணை அபிவிருத்தி சங்கத்தின் இணைப்பாளர் ,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் அமைப்பாளர்கள உற்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த 06 மாத பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்கள் அணைவரும் பூரண பயனை அடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளதாக வர்த்தக தாய் சம்மேளனத்தின் மாவட்ட திட்ட இணைப்பாளர் எஸ்.ஏ.சியாம் சிங் செய்சா தெரிவித்தார்.
மன்னாரில் மீள் குடியேற்றப்பகுதிகளில் பண்ணை பயிற்சிகள் ஆரம்பிப்பு.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
January 23, 2013
Rating:
No comments:
Post a Comment