அண்மைய செய்திகள்

recent
-

'திவிநெகும' அதிகமான நன்மையினை வடமாகாணமே அடையப் போகின்றது


திவிநெகும தேசிய திட்டத்தின் மூலம் அதிகமான நன்மையினை வடமாகாணமே அடையப் போகின்றது.இவ்வாறு நன்மையடையும் போது எமது பிரதேசங்களும் பல் துறைகளிலும் அபிவிருத்திகானும் என்பதை உறுதியாக கூறுகின்றேன் என்றுமன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் நேற்று(18-1-2013)  கூறினார்.

மடு பிரதேச செயலகப் பிரிவில் வறுமையற்ற இலங்கையினை ஏற்படுத்தும் தேசிய திட்டத்தினை மக்கள் மத்தியில் அறிமுகம செய்து வைக்கும் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றும் போது-

கடந்த கால யுத்தம்,இயற்கை அழிவுகள் என்பன எமது மக்களை பாதித்துள்ளது.இவ்வாறு துயருற்று இருக்கும் எமது மக்களுக்கு ஆறுதலை தருவனவாக இந்த அபிவிருத்தி திட்டங்களே,இதனை நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்பது தான் எமது ஆசையாகும்.

வெள்ள அச்சுறுத்தலின் போது நாம் எவ்வாறு அரச அதிகாரிகளுடன் ஒன்றுபட்டு எமது தேவைகளை பெற்றுக் கொள்வதில் செயற்பட்டோமோ அதே போன்று அபிவிருத்தி திட்டங்களிலும் நாம் செயலாற்ற வேண்டும்.

எமக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி   தமது இலக்குகளை அடைந்து கொள்ளவென சிலர் செயற்படுகின்றார்கள்.அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பதை எமது மக்கள் நன்றாக விளங்கி வைத்துள்ளார்கள்.

திவிநெகும திட்டம் என்பது வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மக்களது முயற்சிகளுக்கு சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் ஒன்றாகவே இருக்கின்றது.

விசாயம்,கால்நடை,தொழில் வாய்ப்பு,சேமிப்பு துறைகள் குறித்து பொது மக்களை தெளிவுபடுத்துவதுடன் அதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் என்பனவற்றை பெற்றுக் கொடுக்கும் முக்கியமானதொரு திட்டம் தான் வாழ்வெழுச்சி திட்டமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இங்கு கூறினார்.

'திவிநெகும' அதிகமான நன்மையினை வடமாகாணமே அடையப் போகின்றது Reviewed by NEWMANNAR on January 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.