அண்மைய செய்திகள்

recent
-

இதுதானா தாய் மனசு ? {கவிதை}


அம்மா என்னை மன்னித்து விடு 
சீராட்டி,பாராட்டி,சோறூட்டி வளர்த்த -உன்னை 
ஒரு பிடி சோறூட்டி பார்க்க முடியாத 
வக்கத்த பயலாய் நானிருக்கிறேன் ..........


உன் போன்ற அம்மாக்கள் 
தாய்ப்பாலில் உசிர் கலந்து ஊட்டிய போதும் 
என் போன்ற பிள்ளைகள்-நன்றி 
மறந்து நிற்கின்றோமே மன்னிப்பாயா?

நீ செய்த தியாகங்கள் 
நானறிந்த போதும் கூட 
நன்றிகெட்ட மகனாய்த் தானே
இன்னும் நான் ... .மன்னிப்பாயா?

பக்கத்தில் இருந்த போதும் .
பாவியாய் தானிருந்தேன் 
தூரத்தில் இருக்கின்றேன் 
துடிக்குதம்மா மனசு.. மன்னிப்பாயா?

என்னைப்போல் எத்தனைபேர் 
வாய் பேச முடியாதவராய் -பாழ் பட்ட 
உலகத்தில் வாழத்தான் செய்கின்றனரோ 
உன்னைப்போல் தாய் மனசை புண்படுத்தி'..............

நன்றி கெட்ட உலகத்தில் 
நானிருந்து என்னபயன் என்றெண்ணி 
வாழ்வுதனை முடித்து விட -முயலுகிற 
போதினிலும்  நீவந்து தடுக்கின்றாய் ....

இதுதானா தாய் மனசு ?
              
இன்னுமொரு முறை பிறப்பது 
நிஜமென்று இருந்து விட்டால் -நானுனக்கு 
தாயாக வரவேண்டும்- அதுவரை 
என்னை மன்னிப்பாயா?.   
                             
                   *சந்துரு*

இதுதானா தாய் மனசு ? {கவிதை} Reviewed by NEWMANNAR on February 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.