மன்னார் படுக்கையில் இயற்கைவாயுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம்: அதிகாரி
மன்னார் படுகையில் எண்ணெயைவிட இயற்கைவாயு காணப்படும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக மன்னார் படுக்கையில் பெற்றோலிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் கெய்ன் லங்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆய்வுகளிலிருந்து எரிவாயு காணப்படும் சாத்தியம் அதிகமானதாக இருந்தாலும் எண்ணெய் காணப்படும் சாத்தியத்தையும் நிராகரிக்க முடியாது என கெய்ன் இந்தியா மற்றும் கெய்ன் லங்காவின் பணிப்பாளர் சுனில் பாரிதி கூறினார்.
மன்னார் படுக்கையில் ஆய்வுக்காக தோண்டப்பட்ட 'டொறடோ' எனும் கிணற்றில் இயற்கைவாயு படிவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கெயன் லங்கா 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தெரிவித்திருந்தது.
இதன் பின்னர் 'பரகியூடா' எனும் இரண்டாவது ஆய்வுக்கிணற்றில் வாயுப்படிவுகள் இருப்பதாக நவம்பரில் அறிவித்திருந்தது. மூன்றாவது ஆய்வுக்கிணற்றில் படிவேதும் காணப்படாமையினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இலங்கை எண்ணெய் ஆய்வுக்கென எட்டு துண்டங்களை இனங்கண்டுள்ளது. இதில் ஒன்று கெய்ன் லங்காவுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒவ்வொரு துண்டங்களை வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.
எஞ்சிய 7 துண்டங்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. கெய்;ன் லங்கா நான்காவது ஆய்வுக்கிணற்றை தோண்டுவதற்கு தயாராகவுள்ளது. வெலாகோ எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த கிணற்றை தோண்டும் வேலைகள் பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பமாகும்.
வர்த்தக ரீதியில் இலாபகரமான அளவுக்கு எண்ணெய் அல்லது வாயு இருப்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அவ்வாறு உறுதிசெய்யப்பட்டாலும் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு 3 தொடக்கம் 5 ஆண்டுகள் வரையிலும் எடுக்கும்.
இது வாய்வாக இருப்பின் அது இலகுவாக இருக்காது. வாயுவை கொண்டு செல்வதும் கட்டுப்படுத்துவதும் இலகுவான வேலையல்ல. எண்ணெய் எனில் குழாய்களை அமைப்பதோடு வேலைமுடிந்து விடும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
மன்னார் படுக்கையில் இயற்கைவாயுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம்: அதிகாரி
Reviewed by NEWMANNAR
on
February 01, 2013
Rating:

No comments:
Post a Comment