அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் ஆயுதக் கலாசாரத்தை ஏற்படுத்த சதி: றிசாத்

வடக்கில் மீண்டும் ஆயுதக் கலாசாரத்தை ஏற்படுத்தி மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல சில சக்திகள் செயற்படுவதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


 அப்பாவி மக்களை பிழையான வழிக்கு இட்டுச் செல்லும் வகையில் மக்களை காட்டிக் கொடுத்து தமது அரசியலை இந்த சக்திகள் செய்கின்றன அதற்கு மக்கள் துனைபோகி விடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 2 வது வலய சமுர்த்தி பிரிவில் 948 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகளை வழங்கிவைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நானாட்டான் பிரதேச செயலளார் சந்திர அய்யா தலைமையில் இந்த வைபவம் முருங்கன் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "தமிழ் - முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் இன்றைய சூழலில் வாழ்ந்துவருகின்றனர்.

 இந்த மக்களுக்கு என்னால் ஆற்றக் கூடிய அனைத்து பணிகளையும் செய்துவருகின்றேன்.என்னில் இனவாதம், மதவாதம், மொழிவாதம் இல்லை. நானாட்டான் பிரதேச மக்கள் எதனை வேண்டி நிற்கின்றனரோ, அதனை இந்த நாட்டின் ஜனாதிபதியிடத்திலும் அமைச்சர்களிடத்திலும் இருந்து பெற்று தருகின்றேன் என்றும் அவர் கூறினார்.

 அரசாங்கத்தினால் இங்கு கொண்டுவரப்படும் அபிவிருத்தி திட்டங்களை தடுக்கும் பணியினை ஒரு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் அரச எதிர்ப்பு போராட்டங்கள், இன வாத சித்தாந்தங்கள் கூறி என்று அந்த கூட்டம் செயற்படுகின்றது. அவர்களது பின்னால் எமது மக்கள் செல்கின்ற போது எதனையும் அந்த மக்களால் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.குறிப்பாக வட மகாகணத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் முரண்பட வேண்டும் என்பதே இந்த சதிகாரர்களின் தேவையாகவுள்ளது.

 அந்த முரண்பாட்டுக்குள் தாங்கள் புகுந்து அதில் இருந்து வங்குரோத்து அரசியலை செய்ய வேண்டும் என்பதான் அவர்களுடைய நோக்கமாகும் என்றும் அவர் சொன்னார்.நானாட்டான் பிரதேசத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களுக்கு தேவையான நீரை வெள்ள அழிவிலிருந்து முறையாக பெற்றுக் கொடுக்கும் வகையில் திட்டங்களை தீட்டியுள்ளோம். அதற்கு 10 ஆயிரம் மில்லியன்கள் தேவையாகவுள்ளது. அதற்கு தேவையான நிதிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத் தருவதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இவைகளெல்லாம் இப்பிரதேச மக்களுக்காக என்பதை எவரும் மறந்து செயற்பட முடியாது.

கடந்த 30 வருடங்களாக எமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களும் துயரங்களும் போதும். இனிமேலும் அதனை எமக்கு தருவதற்கு எவரும் முயற்சித்தால் அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்ககூடாது. இதன் மூலம் மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்த அவர்களினால் இடப்படும் தூபம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சமுர்த்தி திட்டத்தின் மூலம் இந்த பிரதேச மக்கள் பல்வேறுபட்ட நன்மைகளை பெறவுள்ளனர்.

குறிப்பாக அவர்களது வாழ்வாதார வசதிகள், சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகள் உள்ளிட்ட வங்கித் தொடர்புகள் என்பன அதில் முக்கியமானதாகும். வறிய நிலையில் வாழம் மக்களை அதிலிருந்து விடுபடச் செய்து அவர்களையும் சமூகத்தில் சம நிலை உடையவர்களாக மாற்றும் ஒரு வேலைத்திட்டம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுக் கொண்டார். இந்த வைபவத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், வட மகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் சம்சுதீன் லியாவுதீன், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
வடக்கில் ஆயுதக் கலாசாரத்தை ஏற்படுத்த சதி: றிசாத் Reviewed by Admin on February 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.