அண்மைய செய்திகள்

recent
-

கொண்டச்சிக்குடா கிராமத்தில் காடுகளை அழித்து மீள்குடியமர உதவுமாறு கோரி மகஜர் கையளிப்பு


மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொண்டச்சிக்குடா கிராமத்திலுள்ள  காடுகளை அழித்து மக்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு கோரி கொண்டச்சிக்குடா மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் மகஜரொன்றை கையளித்துள்ளது. 


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடமே கொண்டச்சிக்குடா மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் நேற்று புதன்கிழமை இம்மகஜரை கையளித்துள்ளது. 


கொண்டச்சிக்குடா மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் தலைமையில் சென்ற குழுவினரே இம்மகஜரை கையளித்துள்ளனர். 


அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


'கொண்டச்சிக்குடா கிராம மக்கள் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று மீண்டும் மீள்குடியேறுவதற்குள் பல தடவைகள் இடம்பெயர்ந்து சென்று இறுதியாக 2009ஆம் ஆண்டு மீண்டும் வந்து தற்காலிக காணிகளில் வாழ்ந்து வருகின்றனர்.


எமது சொந்தக் கிராமம் தற்போது அடர்ந்த காடுகளாக உள்ளதினால் மீள்குடியமருவதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.


அப்பகுதியில் மிதிவெடிகள் அகற்றப்பட்டதன் பின்பே குடியேற அனுமதிக்கப்படுவார்களென பாதுகாப்பு படையினரால் தெரிவிக்கப்பட்டது. தற்போது மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளமையினால் எமது கிராமத்தில் மீள்குடியேற தயாராகவுள்ளோம். 


இதற்கு எமது கிராமங்களிலுள்ள காடுகளை அழித்து மீளக்குடியமர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொண்டச்சிக்குடா கிராமத்தில் காடுகளை அழித்து மீள்குடியமர உதவுமாறு கோரி மகஜர் கையளிப்பு Reviewed by NEWMANNAR on February 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.