இடையீட்டு மனுக்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைச்சரான றிசாத் பதியுதினுக்கு எதிரான மன்னார் நீதவான் அவமதிப்பு வழக்கினை முன்னெடுப்பதற்கு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் தலைவரான எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா தனிப்பட்ட காரணங்காட்டி மறுத்துள்ளார்.
இதனால், இந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதியரசர்கள் ரோஹினி முனசிங்க, தீபலி விஜேசுந்தர ஆகியோர் கொண்ட வேறொரு குழாமை இவர் நியமித்துள்ளார்.
இதற்கமைய புதிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளது.
அத்துடன் நான்கு இடையீட்டு மனுக்களையும் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் தலைவரான எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா நிராகரித்துள்ளார்.
இலங்கை வழக்குரைஞர்கள் சங்கம், அக்கரைப்பற்று வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் கல்முனை வழக்குரைஞர்கள் சங்கம் ஆகியனவே இந்த இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. பிரதிவாதியான அமைச்சர் றிசாத் பதியுதினும் நேற்று (13/02/2013) நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.
இடையீட்டு மனுக்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
February 14, 2013
Rating:

No comments:
Post a Comment