அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நொச்சிக்குளம் பயணிகள் தரிப்பிடம் கவனிப்பார் அற்ற நிலையில்{படங்கள் }

மன்னார்  பிரதேச சபை  பிரிவுக்குற்பட்ட நொச்சிக்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள பயணிகள் தரிப்பிடம் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாக குறித்த பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார்-முருங்கன் பிரதான வீதியில் நொச்சிக்குளம் கிராமம் அமைந்துள்ளது.நொச்சிக்களம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக குறித்த பயணிகள் தரிப்பிடம் அமைந்துள்ளது.

குறித்த தரிப்பிடம் பல மாதங்களாக கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றது.

 குறித்த தரிப்பிடத்தின் கூரைப்பகுதி உடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த தரிப்பிடம் கட்டாக்காலிகளின் உறைவிடமாக தற்போது காணப்படுகின்றது.

குறித்த தரிப்பிடம் உரிய முறையில் பராமறிக்கப்படாததன் காரணத்தினால் போக்கு வரத்திற்காக காத்திருக்கும் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தரிப்பிடத்திற்கு வெளியில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பில் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் அவர்களிடம் கேட்ட போது,,,

-குறித்த தரிப்பிடத்தின் நிலமை தொடர்பில் மன்னார் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த தரிப்பிடம் புனர் நிர்மானம் செய்யப்பட்டு வர்ணம் பூசும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

(மன்னார் நிருபர் வினோத் )
மன்னார் நொச்சிக்குளம் பயணிகள் தரிப்பிடம் கவனிப்பார் அற்ற நிலையில்{படங்கள் } Reviewed by Admin on February 19, 2013 Rating: 5

2 comments:

Unknown said...

Good LTTE udaithathu

Unknown said...

Good LTTE udaithathu

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.