அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமில் நகரில் அமையவுள்ள விளையாட்டு மைதான இடமாற்றம் தொடர்பில் எனக்கெதிராக பொய் பிரச்சாரம்-அமைச்சர் றிஸாட்

மன்னார் எமில் நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள மன்னார் நவீன பொது விளையாட்டு மைதானத்தை நான் எச்சந்தர்ப்பத்திலும் தாராபுரத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என கைத்தொழில் மற்றும் வாணிபத்துரை அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதீயூதீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் நேற்று (14-02-2013) ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் எப்பகுதியிலும் எந்த அபிவிருத்தி பணிகளாக இருந்தாலும் சரி,அல்லது புதிய கட்டிடங்கள் கட்ட நிர்மாணப்பணிகள் இடம் பெற்றாலும் குறித்த மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் அதிக மகிழ்ச்சியடைவதுடன் குறித்த பணிகளை நான் விரைவில் பூர்த்தி செய்வதற்கூறிய  நடவடிக்ககைகளை நான் பலதடவை எடுத்துள்லேன்.

இந்த நிலையில் மன்னார் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கு ஒன்று அமையப்பெருவது மிகவும் மகிழ்சியான விடையம்.

குறித்த விளையாட்டு அரங்கு தொடர்பில் மன்னார் நகரில் பொருத்தமான காணியொன்று கிடைக்காத பட்சத்தில் மன்னார் மாவட்டத்தில் தாராபுரத்திலோ அல்லது ஏதேனும் பொருத்தமான இடத்திலோ தேவையான காணியினை பெற்றுத்தருவதற்கு நான் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

இவ்விதம் விளையாட்டு அரங்கு தொடர்பில் பொருத்தமான காணியொன்றை நான் பெற்றுத்தருவது குறித்த தகவலை சிலர் அரசியல் காழ்புணர்வுகளுக்காக மன்னார் நகரில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு அரங்கினை தாராபுரத்திற்கு நான் மாற்றி விட்டதாக பெய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நவீன விளையாட்டு அரங்கு முன்பு திட்டமிட்ட எமில்  நகர் பகுதியில் அமைப்பது தொடர்பில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

சகல வசதிகளும் உடைய விளையாட்டு அரங்கு மன்னார் நகரப்பகுதியிலே அமைவது பொருத்தமானது எனவும் அமைச்சர் றிஸாட் பதீயூதீன் தெவித்தார்.



இலங்கையில் எங்கும் காணப்படாத தமிழ்-முஸ்ஸிம் இனங்களுக்கிடையிலான இன ஒற்றுமை மன்னார் மாவட்டத்திலேயே நிலவி வருகின்றது.

இது குறித்த தான் பெருமிதம் அடைவதாகவும்,அதனை சீர்குலைப்பதற்கு தான் எச்சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் றிஸாட் பதீயூதீன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் எமில் நகரில் அமையவுள்ள விளையாட்டு மைதான இடமாற்றம் தொடர்பில் எனக்கெதிராக பொய் பிரச்சாரம்-அமைச்சர் றிஸாட் Reviewed by NEWMANNAR on February 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.