அண்மைய செய்திகள்

recent
-

அரசியல்வாதிகள் மீனவ பிரச்சினையை கிளறிவிடக்கூடாது: வி.சகாதேவன்


எமது மீனவ சமூகத்தின் பிரச்சினையை மேலும் மேலும் கிளறிவிட்டு அதில் குளிர்காயும் வாக்கு வங்கி அரசியலை நிறுத்தி உண்மையான தூர நோக்குடன் செயற்பட தவறினால் எமது சமூகத்தை மீண்டும் ஒரு அழிவிற்குள் தள்ளிவிட்ட அவப்பெயரையும் தாங்கள் சந்திக்க வேண்டி ஏற்படும் என போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்.


எமது மீனவர்களின் பிரச்சனைகளை அரசியல் ரீதியில் அணுகாமல் உங்களை தாழ்த்தி நிர்வாக மட்டங்களில் அணுகுவதன் மூலமாக இப்பிரச்சினையை இலகுவில் தீர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து முல்லைத்தீவின் கொக்கிளாய்வரை நடைபயணத்தை நேற்றுவரை மேற்கொண்ட இவர்கள், வவுனியாவில் ஊடகவியாளர்கள் சந்திப்பை இன்று நடத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நடைபயண யாத்திரையானது மீனவ மக்களுக்;கு மாத்திரமல்லாது சமூகத்தின் சகல மட்டங்களிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது. எமது நடைபயணமானது பல இடங்களில் பேரணியாகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களாகவும் எழுச்சி பெற்றது. அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் மீறி மக்கள் அணி திரண்டார்கள். சில இடங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பும் இந்தப்பாதயாத்திரைக்கு கிடைத்தது. நாம் பாதயாத்திரை செய்த இடங்களில் எல்லாம் கடல் இயற்கை வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததை அவதானித்தோம். 

அந்த வகையில் நாம் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்

1. இழுவைப்படகு தொழிலை நிறுத்துவது.

இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளின் அத்துமீறலால் எமது கடல்வளம்   பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது. அரசியல்வாதிகளின் செல்வாக்கில் நடைபெறும் சட்டவிரோத இழுவைப்படகு தொழிலை நிறுத்துவது.

2. வெளிப்பிரதேச மீனவர்களின் அத்துமீறலை தடுப்பது.

அதாவது அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் எமது மீனவர் சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாமல் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிப்பிரதேச மீனவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும்இ தமது கலாசாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதையும் இதனால் தமது பொருளாதாரம் பாதிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

3. எமது இயற்கை வளங்களை பாதுகாப்பது.

 உலகிலேயே மிகச்சிறந்த இயற்கை வளம் நிறைந்த பல்வகை உயிரினச் சூழலைக்கொண்ட பல்வகை அரிதான இறால்இ நண்டுஇ கடலட்டைஇ சங்கு வகைகளின் இருப்பிடமான பவளப்பாறைகளும்இ கடல் உயிரினங்களின் இனப்பெருக்க மறைவிடங்களான கடல் தாவரங்களும் ஏறத்தாழ 80மூ இற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. 

4.  தடைசெய்யப்பட்ட மீன்பிடியை நிறுத்துவது.

சட்டவிரோத தொழிலான டைனமெற் பாவித்தல்இ இழுவைப்படகு தொழில்இ மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பாவித்தல்இ வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் கடல் உயிரிகள் நண்டுஇ இறால் போன்றவற்றின் இனப்பெருக்கப்பகுதிகளில் அவை சினை முட்டைகளுடனும், குஞ்சுகளுடனும் இருக்கையில் முகத்துவாரம்,கழிமுகம் ஆகியவற்றில் அவற்றினை வழிமறித்து அழிப்பது போன்றவற்றினை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

இந்த விடயத்தில் சமூக அக்கறையுடையவர்கள், அரசியல்வாதிகள்,பாடசாலைமாணவர்கள் ஏனைய சமூகத்தினர், இயற்கை ஆர்வலர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைத்து செயற்பட விடுமாறு எமது மீனவ சமூகத்தின் சார்பாக மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பாகவும், இயற்கை அன்னையின் சார்பாகவும் அழைப்பு விடுக்கின்றேன்.  

இந்திய அரசாங்கத்திடம்

எமது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் இயற்கை வளங்களை அழித்து அவர்களை வறுமைக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்காது இத்துடன் எமது அகிம்சை வழியான போராட்டத்திற்கு செவிசாய்த்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங்இ இந்திய ஜனாதிபதி பிரனாவ் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாஇ எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிக,ம.தி.மு.க.தலைவர் வை.கோபாலசாமி, தமிழக இளைஞர் சங்கத்தலைவர்  யுவராஜ்,தி.மு.க.இளைஞர் அணிச்செயலாளர் மு.க.ஸ்ராலின், புதுவை மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அமைச்சர் நாராயணசாமி,நாம் தமிழர்கட்சி தலைவர்  சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் எமது போரால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வைக்கப்படும் எமது அகிம்சை ரீதியான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். 

இலங்கை அரசாங்கத்திடம்

வெளிப்பிரதேச அரசியல்வாதிகளின் இடையூறுகள் எமது மக்களின் கடல் வளம் சார்ந்த அபிவிருத்திக்கு சாதகமாக அமைய வேண்டுமே தவிர அவற்றை அழிப்பதற்கும், சுரண்டுவதற்கும், எமது மக்களின் வாழ்வுரிமையை பாதிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது. அத்துடன் எமது இந்த அகிம்சை ரீதியான நியாயமான கோரிக்கைகளுக்கு கௌரவம் அளிக்கும் முகமாக பலாலி மயிலிட்டி அதியுயர் பாதுகாப்பு வலயப்பாதையை 23 வருடங்களுக்கு முன் திறந்து விட்டுள்ளது போல அப்பகுதிகளில் எமது மக்கள் மனித உரிமை நியதிக்கு அமைவாக சுதந்திரமாகவும்இ கௌரவமாகவும் வாழ வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் கொக்கிளாய் முள்ளிக்குளம் உட்பட எமது மீனவ சமூகத்தின் பிரச்சினைக்கு எமது ஜனாதிபதி மீனவ சமூகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதுடன்இ மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தவரும் என்பதால் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எமது அரசியல்வாதிகளுக்கு 

எமது மீனவ சமூகத்தின பிரச்சினையை மேலும் மேலும் கிளறிவிட்டு எரியவிட்டு அதில் குளிர்காயும் வாக்கு வங்கி அரசியலை நிறுத்தி உண்மையான தூர நோக்குடன் செயற்பட தவறினால் எமது சமூகத்தை மீண்டும் ஒரு அழிவிற்குள் தள்ளிவிட்ட அவப்பெயரையும் தாங்கள் சந்திக்க வேண்டி ஏற்படும். எமது மீனவர்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியில் அணுகாமல் உங்களை தாழ்த்தி நிர்வாக மட்டங்களில் அணுகுவதன் மூலமாக இப்பிரச்சினையை இலகுவில் தீர்க்க முடியும். அத்துடன் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசில்வாதிகளாயினும் சரிஇ தமிழ் அமைச்சர்களாயினும் சரி தங்கள் தவறுகளை திருத்துவதுடன் தங்களது சுயஇலாபம் ஒன்றை மட்டும் கருதாமல் எமது இயற்கை அழிவதை பாதுகாக்கவும்இ எமது மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படவும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை ஒழிக்க முன்வர வேண்டும். 

குறிப்பாக வடபகுதியில் பேசாலை,பள்ளிமுனை, குருநகர், வல்வெட்டித்துறை,ஆகிய பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத றோலர் தொழிலுக்கு இந்திய றோலர்களை காரணம் காட்டி எமது அரசியல்வாதிகளின் பின்னணியில் நின்று செயற்படுவதாகவும் சகல சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும்இ இயற்கை வள அபகரிப்பும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு படைத்தவர்களின் பின்னணியிலேயே நடைபெறுவதாகவும் மீனவ மக்களும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் எம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். 

புலம்பெயர்ந்தோர் தமிழ் சமூகத்திற்கு

எமது கரையோர இயற்கை வளங்களை பாதுகாத்து எமது கடற்கரையோர கிராமங்களுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கும் எமது பெறுமதி மிக்க மீனவ சமூகத்தை காப்பாற்றுவதற்கும் அதன் ஊடாக உங்கள் இலக்குகளை அடைவதற்கும் ஒரே வழி வெளிநாடுகளில் நின்று சும்மா கத்திக்கொண்டும், கெடுபிடித்துக்கொண்டும்  எந்த பயனும் ஏற்படப் போவதில்லை நீங்கள் அனைவரும் இரட்டைப் பிரஜை உரிமைக்கு விண்ணப்பிப்பதனை விட்டு விட்டு உங்கள் உரிமைகளை உங்கள்  சொந்த ஊரில் சொந்த நிலங்களில் சொந்த வீடுகளில் சட்டரீதியாக நிலைநாட்ட முயல வேண்டும்;.  குறிப்பாக கொக்கிளாய் பகுதி பூர்வீக மக்கள் சார்பாக இக்கோரிக்கையினை முன்வைக்கின்றேன்' என தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் மீனவ பிரச்சினையை கிளறிவிடக்கூடாது: வி.சகாதேவன் Reviewed by NEWMANNAR on February 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.