கோயில் குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்கள் கவனிப்பார் அற்ற நிலையில்!
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிர் பிரிவுக்குற்பட்ட கோயில்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குற்பட்ட மீள்குடியேற்றக்கிராமங்களுக்கு இதுவரை அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,இந்திய வீட்டுத்திட்டங்கள் எவையும் வழங்கப்படவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கோயில் குளம் கிராம சேவையாளர் பிரிவில் கோயில் குளம்,சவிரி குளம்,புதுக்குளம்,சோனகப்பிட்டி ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு கிராமத்திலும் சுமார் 280 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த மக்கள் மீள்குடியேறிய போது அரசாங்கத்தினால் ஆரம்பத்தில் தற்காலிக குடிசைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் மாத்திரமே வழங்கி வைக்கப்பட்டது.
தற்போது எவ்வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் குறித்த கிராமங்களுக்கு இதுவரை உரிய முறையிலான போக்குவரத்துச் சேவைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி மின்சாரம்,குடி நீர் வசதிகள் எவையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கிராமங்கள் காடுகளைக்கொண்டதாக காணப்படுவதினால் இரவு நேரத்தில் நடமாட்டத்திற்கு அந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விசப்பூச்சிகளின் நடமாட்டம் இரவு நேரத்தில் அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் பாதீக்கப்படப்ட அந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதே வேலை கோயில் குளம் கிராம மக்களுக்கு வெளிநாட்டில் உள்ள அவர்களுடைய உறவினர்கள் உதவிகளை மேற்கொண்டு வருகின்றமையினால் கோயில் குளம் கிராம மக்கள் தமது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயில் குளம் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ஏனைய மூன்று கிராமங்களும் கவனிப்பார் அற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் இது வரை ஒரு வீடுகள் கூட எமது கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் நாங்கள் அனைவரும் தற்காலிக கூடாரங்களிலேயே பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக சவிரி குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறிஸ் கந்தகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,,,
இந்திய வீட்டுத்திட்டம் எனது பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.
முதலாம் கட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகள் தற்போது அடித்தளம் மட்டுமே போட்ட நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் கோயில் குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட குறித்த 4 கிராமங்களும் மூன்றாம் கட்ட தெரிவிற்கு உற்படுத்தப்பட்டுள்ளது.
-இது தொடர்பான சகல விபரங்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர் வரும் காலங்களில் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் கோயில் குளம்,சவிரி குளம்,புதுக்குளம்,சோனகப்பிட்டி ஆகிய கிராமங்களுக்குச் சென்று தெரிவுகளை மேற்கொள்ளுவார்கள் என மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறிஸ் கந்தகுமார் மேலும் தெரிவித்தார்.
கோயில் குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்கள் கவனிப்பார் அற்ற நிலையில்!
Reviewed by NEWMANNAR
on
February 15, 2013
Rating:

No comments:
Post a Comment