மாணவி கையை இழந்தமைக்கு வைத்தியர்களின் கவக்குறைவே காரணம்!
சட்டபீட மாணவியான அச்சலா பிரியதர்ஷினியின் இடது கை அகற்றப்பட்டமைக்கு மாத்தறை வைத்தியசாலை வைத்தியர்களின் கவனயீனமே காரணமென இதனை விசாரிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு காரணமான வைத்திய நிபுணர் உட்பட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென அக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவத்துக்கு காரணமானவர் எனக்கூறப்படும் வைத்திய நிபுணர் கவனயீனமாக இருந்தமை, குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டிருந்த வாட்டிற்கு பொறுப்பான வைத்தியர் சரியாக செயற்படாமை போன்ற விபரங்களும் அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
அரை மணித்தியாலத்துக்கு ஒரு தடவை வைத்தியர் நாடித்துடிப்பை பரிசோதனை செய்யவும் வைத்தியர் தவறிவிட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்கவிடம் கடந்த திங்கட்கிழமை கையளிக்கப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளின் பொருட்டு இவ்வறிக்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் அனுப்படவுள்ளது.
மாணவி கையை இழந்தமைக்கு வைத்தியர்களின் கவக்குறைவே காரணம்!
Reviewed by NEWMANNAR
on
February 15, 2013
Rating:

No comments:
Post a Comment