மன்னார் சிறார்களுக்கு மன உளச்சலிலிருந்து விடுபட ஓர் அரியவாய்ப்பு(சிறுவர் பூங்கா படங்கள் இணைப்பு )
நவீன உலகில் பெற்றோரின் அயராத வற்புறுத்தலினால் ஒருநாளில் இப்பாலர்கள் குறைந்தது 8 மணித்தியாலம் நித்திரை கொண்டு, கூடியது 6 மணித்தியாலம் கல்வி கற்று, குறைந்தது 4 மணித்தியாலம் ரியூசன் கல்வி கற்று, குறைந்தது 2 மணித்தியாலம் வீட்டுப்பாடம் செய்து பெரும் மன உழசை;சலையும், உடல் அசதியையும் இவ்வாழும் வயதில் அனுபவிக்கின்றனர்.
இச்சிறுவர்களின் (STRESS) உடல், மன சக்தியைப் போக்க தற்போது ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது, மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள பல மில்லியன ரூபா செலவில் அமைக்கப்பட்ட மன்னார் நகர சபையின் வழிகாட்டலில் ; (USAID), (ALLIENCE DEVELOPMENT TRUST) நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறுவர் பூங்காவாகும்.
இவ் அழகிய பூங்காவில் சிறுவர்களை மகிழ்வூட்டவும் சிந்திக்கவும் அமைந்துள்ள பெரிய உருவில் அமைக்கப்பட்ட யானை, மான், சமி;பந்தி குரங்கு, பறவைகள் மாதிரிகள் சிறுவர் உடல், மன அசதியைப் போக்க ஊஞ்சல், சறுக்கல்கள், சிற்றுண்டிச்சாலை, சிறு விளையாட்டு இல்லம் போன்றன பெரிதும் மகிழ்ச்சியூட்டுகின்றன.
ஆழகிய பூக்கள், நிழல் தரும் மரங்கள், மின்சார விளக்குகள், நவீன உள்நுழையும் வாசல் போன்றன பூங்காவை மேலும் மெருகூட்டுகின்றன. இப்பூங்காவில் சிறுவர்களுக்கான மலசல கூடம் இல்லாமையை உணர்ந்து டயஸ்பொறா லங்கா (DIASPORA LANKA) அமைப்பு ஓர் மலசல கூடத்தை அமைத்து கொடுக்க முன் வந்துள்ளது.
இவ் அழகிய சிறுவர் பூங்காவை பேணிப் பாதுகாப்பது தனியே மன்னார் நகர சபையின் கடமை என்று எண்ணி விடாது சகல பெற்றோர்களும், வர்த்தவர்களும், நலன்விரும்பிகளினதும் முக்கிய கடமையாகும்.
இதற்கு நகரசபை சிறிய தொகையை ரூபா 10 அறவிடுவது சாலச் சிறந்தது. இருப்பினும் 5வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாகவும், 5-12வயதிற்குப்பட்டவர்களுக்கு ரூபா 10 பெரியவர்களுக்கு ரூபா 20அறவிடுவது நன்மை பயக்கும்.
இப்பூங்காவை சகல சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் காலை 8மணி தொடக்கம் மாலை 8மணிவரை திறந்திருப்பதும், வாராந்த நாட்களில் மாலை 3மணி தொடக்கம் பிற்பகல் 8மணி வரை திறப்பதும் சிறுவர்களுக்கு நன்மை பயக்கும்.
மேலும் சிறுவர் மேடை நன்கு அமைந்துள்ளதால் ஒவ்வொரு போயா விடுமுறை நாட்களிலும் மன்னாரிலுள்ள 10 ற்கும் மேற்பட்ட பாலர் பாடசாலைகளின் நடனம், ஆக்கம், நாடகம் போன்றவற்றை நடாத்தி சிறார்களை ஊக்கப்படுத்துவதுடன் பாலர் பாடசாலைகளின் ஆக்கங்களை வெளிக் கொண்டுவர முடியும்.
மேலும் பெற்றோர், பெரியோர்கள் இவ் அழகிய பூங்காவில் பொலித்தீன் பாவனை, பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை, வெளிச்சுவரில் நோட்டீஸ் ஒட்டுதல், விளம்பரங்கள் போன்றவற்றை தடைசெய்தல் வேண்டும்.
வரட்சி நாட்களில் நன்கு அமைந்த புற்றரைகளை மன்னார் நகரசபை தினமும் நீர் ஊற்றிப் பாதுகாப்பதுடன் (ளுNயுஊமுளு) சிற்றுண்டிச்சாலைகளை சுகாதார முறையில் நடாத்துவதாலும், பூங்கா பாதுகாவலர்கள் யூனிபோம் சீருடை கொடுத்து, மின்சாரம், குடிநீர்,பற்றுச்சீட்டு, போன்றவற்றை நடைமுறைப்படுத்த ஊக்கப்படுத்தல் வேண்டும். காலையும், மாலையும் இவ்விடங்களை துப்புரவு செய்தல் வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தை மன்னார் நகர சிறுவர்களுக்கு மாத்திரம் வழங்கியது மாத்திரம் அல்ல, சகல பிரதேச செயலகம், சகல பிரதேச சபைகளும் அச்சிறார்களுக்கு அமைத்துக் கொடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.
'சிறுவர் நமது நாட்டின் பொக்கிஷம் ஆகும்'.
திரு. சின்கிலேயர் பீற்றர்
petsinclair@gmail.com
மன்னார் சிறார்களுக்கு மன உளச்சலிலிருந்து விடுபட ஓர் அரியவாய்ப்பு(சிறுவர் பூங்கா படங்கள் இணைப்பு )
Reviewed by Admin
on
February 22, 2013
Rating:
No comments:
Post a Comment