கிறிஸ்துவின் இறப்பையும் சிலுவைப்பாடுகளையும் நினைவுகூரும் 'பெரிய வெள்ளி' இன்று

அனுஷ்டிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளையும் அவரது இறப்பையும் நினைவுகூரும் வகையில் புனித வெள்ளி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்களின் பாவங்களை சுமந்து, சிலுவையுடன் கல்வாரி மலைநோக்கிச் சென்று இரட்சிப்பின் மேன்மைக்காய் தன் இன்னுயிரைத் தியாகம் செய்தார்.
கொள்ளை புரிந்து கொலை தீர்ப்புப் பெற்ற இரு கள்வர்களுடன் காசினியைக் காப்பதற்காய் வந்த பரலோகப் பிதாவின் ஒரே குமாரன் தன்னுயிரை சிலுவையில் ஒப்புக்கொடுத்தார்.

இயேசு கிறிஸ்துவின் தியாகம், இரட்சிப்பின் மேன்மை மற்றும் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் நோக்கில் கிறிஸ்தவப் பெருமக்களால் பெரிய வெள்ளி அனுஷ்டிக்கப்படுகின்றது.
கிறிஸ்துவின் இறப்பையும் சிலுவைப்பாடுகளையும் நினைவுகூரும் 'பெரிய வெள்ளி' இன்று
Reviewed by Admin
on
March 29, 2013
Rating:

No comments:
Post a Comment