அண்மைய செய்திகள்

recent
-

மனிதஉரிமை மீறல்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்: அமெரிக்கா, பிரித்தானியா


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமைமீறல்கள் குறித்து உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவும், பிரித்தானியாவும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ளன. 


நேற்று நடைபெற்ற இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை மீதான விவாதத்தின் போதே, இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை, சீனா, ரஸ்யா, ஓமான், பாகிஸ்தான், வெனிசுலா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகள் இலங்கைவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. 

இலங்கைவின் மனிதஉரிமைகள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அனைத்துலக சமூகம் இலங்கைவுக்கு மேலும் கால அவகாசத்தையும் இடைவெளியையும் கொடுக்க வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

இந்த விவாத்தில் பேசிய இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க, பூகோள கால மீளாய்வு அறிக்கையின் போது முன்வைக்கப்பட்ட 204 பரிந்துரைகளில், 91 பரிந்துரைகளை தமது நாடு நிராகரிப்பதாக குறிப்பிட்டார். 

110 பரிந்துரைகளை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும், 3 பரிந்துரைகள் குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், 30 ஆண்டுகால போரில் இருந்து விடுபட்டுள்ள இலங்கைவுக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். 

இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் இலங்கைவின் மனிதஉரிமைகள் நிலையைச் சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
மனிதஉரிமை மீறல்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்: அமெரிக்கா, பிரித்தானியா Reviewed by NEWMANNAR on March 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.