வடக்கு - கிழக்கிற்கு ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர்கள் நியமனத்திற்கு விண்ணப்பம் கோரல்
யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி தேர்தல் தொகுதி, யாழ். தேர்தல் தொகுதி, காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி, கோப்பாய் தேர்தல் தொகுதி, மானிப்பாய் தேர்தல் தொகுதி, நல்லூர் தேர்தல் தொகுதி, பருத்தித்துறை தேர்தல் தொகுதி, உடுப்பிட்டி தேர்தல் தொகுதி, வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி என்பவற்றுக்கும்.
மன்னார் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதி ஆகியவற்றுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அமைப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், செயலாளர் நாயகம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல. 307 ரீ. பி. ஜாயா மாவத்தை கொழும்பு - 10 என்ற முகவரிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப படிவம் அனுப்பப்படும் போது கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் தேர்தல் தொகுதியின் பெயர் குறிப்பிடப்படல் வேண்டும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கிற்கு ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர்கள் நியமனத்திற்கு விண்ணப்பம் கோரல்
Reviewed by Admin
on
March 02, 2013
Rating:

No comments:
Post a Comment