அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா.வுடன் இணைந்து அரசாங்கம் செயற்படல் வேண்டும்: கூட்டமைப்பு

உண்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்தில் செயல்படுதல் என்பதை நோக்காக கொண்டும் மனித உரிமை பேரவையில் கொண்டுவருகின்ற எந்தவொரு யோசனைக்கும் ஆதரவளிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.


 இது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 தென்னாபிரிக்காவின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு ஐக்கியப்படுத்தப்பட்டமைக்கு 'உண்மை' மற்றும் 'மீள் கட்டுமானம்' முக்கியமானதாக அமைந்தது என்பதனை நினைவுப்படுத்த விரும்புகின்றோம். யுத்தம் தொடர்பில் உண்மையை மூடிமறைக்கின்ற கருத்துக்கள் இலங்கைக்குள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. எனினும், உண்மையான நிலைமையினை வெளிப்படுத்துவதே எமது நோக்கமாகும்.

 யுத்தத்தில் ஈடுபட்ட இருத்தரப்பினர்களினாலும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் அறிக்கையிடப்படடும் உள்ளது.

 இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனக்குழுவை நியமிக்குமாறு அந்த குழு பரிந்துரைகளையும் செய்திருந்தது. தமிழ் மக்களின் வாக்குகளில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அந்த நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுள்ளது.

 எனினும் தற்போதைய அரசாங்கம் அந்த பரிந்துரையை கணக்கில் எடுக்காது விட்டுவிட்டது. சனல்-4 ஒளிநாடா வெளியிடப்பட்டதன் பின்னர் அரசாங்கம் அதனை உடனடியாகவே நிராகரித்து விட்டது.எனினும், அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராயுமாறு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அரசாங்கம் அந்த வீடியோக்களை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. அப்படியாயின் அவற்றை சுயாதீனமாக ஆராய்ந்திருக்கவேண்டும். இது தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு உரியவகையில் பதிலளித்திருக்கவேண்டும். சுயாதீன சர்வதேச விசாரணையின் மூலமாக உண்மை உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்பதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

 யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அந்த விசாரணையில் உள்ளடக்கப்படவேண்டும். விசேடமாக நீதித்துறையின் சுயாதீன தன்மை சீர்குலைந்திருக்கின்ற நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகள் தேசிய ரீதியில் நடத்தப்படும் என்பது கேள்விக்குறியாகும்.

 கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் மறைந்திருக்கும் உண்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்தில் செயல்படுதல் என்பதனை நோக்காக கொண்டும் மனித உரிமை பேரவையில் கொண்டுவருகின்ற எந்தவொரு யோசனைக்கும் ஆதரவளிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

 யோசனைக்கு எதிராக சென்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் அரசாங்கம் தோல்வியடைந்தால் அது சர்வதேச ரீதியில் அவமானப்படுவதாகவே அமைந்துவிடும். எந்தவொரு உண்மையும் மூன்றாவது கட்டத்தில் வெளிவரும் என்பது அறிஞர் ஒருவரின் கருத்தாகும். முதலாவது 'இழிவு படுத்தல்', இரண்டாவது 'அதற்கு எதிராக செயற்படல்', மூன்றாவது 'பிரச்சினை உண்மையானது' என விளங்கிக்கொள்ளல் ஆகும். உண்மையை உறுதிப்பத்திக்கொள்வதற்கு இலங்கை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றவேண்டும். தமிழ் மக்கள் இலங்கையில் முழு மக்களுடன் சமாதானமாக மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சுற்றுச்சூழலை உருவாக்குவது உண்மையினால் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வுடன் இணைந்து அரசாங்கம் செயற்படல் வேண்டும்: கூட்டமைப்பு Reviewed by Admin on March 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.