புதிய பாப்பரசர் முதல் நாளன்று தெரிவாகவில்லை
புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் வத்திகானில் ஆரம்பிமாகியுள்ள நிலையில் புதிய பாப்பரசர் முதல் நாளன்று தெரிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாப்பரசர் நியமிக்கப்படவில்லையாயின் கரும்புகை மேலெழுப்பப்படும். அந்த வகையில் நேற்றையதினம் கரும்புகை எழுப்பப்பட்டது. இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக உலகெங்கிலும் இருந்து 115 கர்தினால்கள் வத்திகானுக்கு வந்துள்ளனர்.
சம்பிரதாய வழிபாட்டுடன் இந்த தேர்வு முறை ஆரம்பித்துள்ளது. உலகில் வசிக்கும் 120 கோடி கத்தோலிக்கர்களின் அடுத்த தலைவர் எதிர்வரும் நாட்களில் தேர்வு செய்யப்படுவார். தென் அமெரிக்காவில் 48 கோடி கத்தோலிகர்கள் உள்ளனர்.
ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனால் கர்தினால்களைப் பொறுத்தவரை 60 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் அதிலும் 21 பேர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.
தென் அமெரிக்காவில் 19 கர்தினால்களும், வட அமெரிக்காவில் 14 கர்தினல்களும், ஆப்பிரிக்காவில் 11 கர்தினால்களும், ஆசியாவில் 10 கர்தினால்களும், ஆஸ்திரேலியாவில் 1 கர்தினாலும் இந்த தேர்வில் பங்கு கொள்வாரகள். கடந்த 600 ஆண்டுகளாக கர்தினால்களாக இருப்பவர்களே பாப்பரசராக தேர்வு செய்யப்படுகின்றனர்.
பாப்பரசர் ஆசிர்வாதப்பர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் இந்த தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு

Reviewed by Admin
on
March 13, 2013
Rating:

No comments:
Post a Comment