தொலைத்த தமது உறவுகளை மீட்டுத் தரக் கோரிய உறவுகளின் உள்ளக் குமுறல்கள் ஒளி வடிவில்…..
வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள மற்றும் காணாமற்போன உறவுகளை மீட்டுத் தரக்கோரி கொழும்பில் நேற்று இடம்பெறவிருந்த போராட்டத்திற்குச் சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் இரவு வவுனியாவில் தடுக்கப்பட்ட நிலையில், அவ்விடத்திலேயே தமது போராட்டத்தை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நேற்றுக்காலை நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பரித்து ஊர்வலமாக மாவட்டச் செயலகம் சென்று மகஜர் கையளிக்கச் சென்றவேளை, அதனை பெற மாவட்டச் செயலர் வருகை தராத நிலையில் வீதியில் அமர்ந்திருந்து மக்கள் தமது ஆறொணாத் துயரத்தை வெளிப்படுத்தினர். இவ் இரண்டு நிகழ்வுகளிலும்
உறவுகளின் உள்ளக் குமுறல்கள் ஒளி வடிவில்…..
"என்பிள்ளை எங்கே கொண்டுவா என்னிடத்து" கதறியழும் தந்தை ஒருவர். வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு காணமற்போன தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பரித்த மக்கள் கூட்டத்தில், தனது பிள்ளையைக் கேட்டுக் கதறியழுத தந்தை.

தொலைந்த தமது உறவுகளுக்காக தம் உயிருடன் மெழுகையும் உருக்கி இருளுக்கு ஒளி சேர்த்த வண்ணம் வவுனியாவில் மன்றாடும் மக்கள்
காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரி வவுனியாமாவட்டச் செயலகம் முன்பு கண்ணீர் சொரியக் கதறியழுத வடக்கு கிழக்கு பொதுமக்கள்
நன்றி -உதயன்
நன்றி -உதயன்
தொலைத்த தமது உறவுகளை மீட்டுத் தரக் கோரிய உறவுகளின் உள்ளக் குமுறல்கள் ஒளி வடிவில்…..
Reviewed by Admin
on
March 07, 2013
Rating:

No comments:
Post a Comment