பயணிகள் பஸ் தரிப்பிடம் இல்லாமல் தவிக்கும் முருங்கன் மக்களின் அவலம்-படங்கள்
நானாட்டான் பிரதேச செயலகத்திற்கும் மற்றும் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட முருங்கன் பிரதான மத்திய வீதியில் கொழும்புஇமன்னார்இவவுனியாஇஅனுராதபுரம் மற்றும் பதுளை இது போன்ற இன்னும் பல மாவட்டங்களுக்கு செல்வதற்காக பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருக்கும் பயணிகளுக்கு பஸ் தரிப்பிடம் இல்லாமல் பல வருட காலமாக கர்ப்பிணி
தாய்மார்கள்இமுதியோர்கள்இசிறுவர்கள்இமற்றும் அரச அதிகாரிகள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்..jpg)
முருங்கனில் அமையப்பெற்றிருந்த பயணிகள் பஸ் தரிப்பிடத்தினை சில மாதங்களுக்கு முன்பு நானாட்டான் பிரதேச சபையினால் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டது.
அதற்கு மாற்றீடாக இது வரைக்கும் தற்காலிகமாக தரிப்பிடம் இது வரைக்கும் செய்து கொடுக்கப்படவில்லை.நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான பல இலட்சம் பெறுமதியான கடை தொகுதி அப்பிரதான வீதியில் கட்டப்பட்டும் இன்னும் விஸ்தரிக்கப்பட்டுகொண்டு இருக்கின்றது.அந்த இடத்தில் மட்டும் எல்லா வசதிகளுடன் கூடிய பஸ் தரிப்பிடம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தங்களின் வருமானங்களை அதிகரித்து கொள்வதற்காகவே அத்தரிப்பிடம் அவ்வாறு கட்டப்பட்டுள்ளது.
எனவே நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் அவர்களே மற்றும் நானாட்டான் பிரதேச செயளாலர் அவர்களே 'மக்களின் சேவை மகேசனின் சேவை' என நினைத்து யுத்த்தினால் துன்பப்பட்ட மக்களின் துயரங்களை துவட்டிவிட எப்போது முன் வருவீர்கள்?
2013-03-15
பயணிகள் பஸ் தரிப்பிடம் இல்லாமல் தவிக்கும் முருங்கன் மக்களின் அவலம்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 15, 2013
Rating:

No comments:
Post a Comment