மன்னார் மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ்-முஸ்ஸிம் மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சி- நகர சபை உறுப்பினர் என். நகுசீன்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து சென்ற முஸ்ஸிம் மக்கள் தற்போது மீள் குடியேற்றத்திற்காக சொந்த இடங்களுக்கு வருகின்ற போது பல்வேறு பிரிவினைவாதங்கள் பேசப்படுகின்றமை மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார்.
இத தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ....
தற்போது இலங்கை நாட்டில் முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்த முஸ்ஸிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அன்றைய காலத்தில் தமிழ்- முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமை மேலோங்கி நின்றது.
முஸ்ஸிம்கள் வெளியேற்றப்பட்ட போது பல தமிழ் சகோதரர்கள் துயரமடைந்தனர்.
தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் மீண்டும் தமது கிராமங்களுக்குச் செல்லுகின்றனர்.இதன் போது பல தரப்பினரால் பல்வேறு பிரிவினை வாதம் பேசப்படுகின்றது.
இது எமக்கு மிகவும் வேதனையளிக்கின்றது.தற்போது முஸ்ஸிம் மக்கள் மீள் குடியேற்றப்படுகின்ற போது காணிப்பிரச்சினை மற்றும் வீட்டுத்திட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த முஸ்ஸிம் மக்களையும் வேதனைக்குள்ளாக்கும் செயலாக காணப்படுகின்றது.மன்னார் மாவட்டத்தில் மீண்டும் மீள் குடியேற்றப்படுகின்ற மக்கள் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இல்லை.தப்பான கருத்துக்களை மக்கள் மத்தியில் சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் ஒற்றுமையாக காணப்படுகின்ற தமிழ்-முஸ்ஸிம் மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றது.
தற்போது தென்மாகாணத்தில் 'பொது பல சேன' என்ற அமைப்பு 'கலால்' தொடர்பாக முஸ்ஸிம்களுக்கு எதிராhக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி அவர்களுக்கு 'பொது பல சேன' என்ற சிறிய குழுவை அழிப்பது பெரிய விடையம் இல்லை.
எனவே எதிர் வரும் காலங்களில் அணைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு அணைவரும் செயற்பட வேண்டும்.இன வாதம்,மதவாதம் பேசுகின்ற குழுக்களை அழித்து மக்கள் ஒற்றுமையாக வாழ ஜனாதிபதி வழியமைக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ்-முஸ்ஸிம் மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சி- நகர சபை உறுப்பினர் என். நகுசீன்.
Reviewed by NEWMANNAR
on
March 16, 2013
Rating:

No comments:
Post a Comment