முசலி பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிறி பொற்கேணி பாடசாலையினை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை.
செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிறி பொற்கேணி பாடசாலையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் சுனேஸ் சோசை தெரிவித்தார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,,
முசலி பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களில் ஒன்றான சிறி பொற்கேணி கிராமமானது தமிழ் முஸ்ஸிம் மக்கள் ஒன்றாக சேர்ந்து வாழும் ஒரு கிராமம் ஆகும்.
இங்கு 150 குடும்பத்திற்கு மேல் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களில் சிலர் விவசாயம் செய்பவர்களாகவும் சிலர் கூலி தொழில் செய்பவர்களாகவும் சிலர் தொழில் வாய்பின்றியும் காணப்படுகின்றார்கள்.
இக் கிராமத்தில் நெடு நாளாக நிலவி வருகின்ற ஒர் முக்கிய பிரச்சினையை எமது முசலி பிரதேச பிரஜைகள் குழுவினர் நேரடியாக பார்த்துள்ளனர்.
இங்கு தற்போது மொத்தமாக 60 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் காணப்படுகின்றார்கள. இவர்களில் 1 தொடக்கம் 5ம் ஆண்டு வரைக்கும் 45 மாணவ மாணவிகள் காணப்படுகின்றார்கள்.
இவர்கள் தற்போது முருங்கன் ,பரிகாரிகண்டல் மற்றும் வேப்பங்குள பாடசாலைக்கு நாளாந்தம் சென்று வருகின்றமையினை பிரஜைகள் குழு அவதானித்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க பாடசாலைக்கு இவர்கள் செல்லுவது என்றால் சிலர் பேருந்துகளிலும், வசதி அற்ற மாணவ மாணவிகள் நடைகளிலும் சென்று வருவதனை எம்மால் காண முடிகின்றது.
மற்றும் இவ்வாறான நிலமைகளில் சில பிள்ளைகள் பாடசாலையினை விட்டு இடை விலக வேண்டிய சூழ்நிலையும் காணப்பகின்றது.
காரணம் பொருளாதார கஸ்ரம். எனவே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் இவ்வாறான நிலமையில் இருந்து விலகி பாடசாலை மாணவ மாணவிகள் சந்தோசமான கல்வியினை தொடர்வதற்கு ஆரம்ப பாடசாலையினை ஆரம்பிக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது என முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் ஊடாக முன் மொழிவினை தெரிவித்து நிற்கின்றோம்.
அங்கு மாணவ மாணவிகள் கல்வியினை சரிவர கற்பதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே மாணவ மாணவிகளின் நிலையினை கருத்தில் கொண்டு இவ் பிரச்சினையினை பரிசீலனை செய்து இவர்கள் ஆரம்ப கல்வியினை சரி வர கற்று எதிர் காலத்தில் சிறந்த மாணவ மாணவிகளை இவர்களின் கிராமத்தில் இருந்து உருவாக்க வேண்டும் என கோரி இதற்கான சரியான தீர்வினை பெற்றுத்தரும் படி முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் ஊடாக கேட்டுக் கொள்ளுகின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
(மன்னார் நிருபர்)
முசலி பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிறி பொற்கேணி பாடசாலையினை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை.
Reviewed by Admin
on
March 25, 2013
Rating:

No comments:
Post a Comment