அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாவற்கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தினுள் தாக்குதல்-மனித மலக்கழிவு வீச்சு- பட இணைப்பு

மன்னார் சாவற்கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை   அந்தோனியார் சொரூபம்  வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கூடு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டதோடு அலயத்தினுள் மனித மலக்கழிவு வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை அன்றன் தவராஜ் தெரிவித்தார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்து கொண்டிருந்த சமயம் ஆலயத்திற்குச் சென்ற இனம் தெரியாத நபர்கள் அந்தோனியாhர் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டிடை உடைத்ததோடு சில பொருட்கள் இழுத்து கிழே  விசப்பட்டு கிடந்தது.

ஆலயப்பகுதியினுள் மனித மலம் வீசப்பட்டு கிடந்தது.இந்த நிலையில் ஆலயத்திற்கு மாலை வந்த மக்கள் குறித்த சம்பவத்தை கண்ட நிலையில் எமக்கு தெரியப்படுத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் நாங்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாக மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை அன்றன் தவராஜ் மேலும் தெரிவித்தார்.



மன்னார் சாவற்கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தினுள் தாக்குதல்-மனித மலக்கழிவு வீச்சு- பட இணைப்பு Reviewed by Admin on March 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.