நடு வீதியில் ஓட ஓட நபர் வெட்டிக் கொலை; குடாநாட்டில் நேற்றுப் பயங்கரம்
பட்டப்பகலில் சினிமாப் பாணியில் யாழ்.நகரில் பயங்கரக் கொலை ஒன்று நேற்று நிகழ்த்தப்பட் டது. வீதியில் ஓட ஓடத் துரப்பட்ட நபரின் மீது அசிட் வீசித் தாக்கிய கும்பல் அவரது கையை வாளினால் வெட்டித் துண்டாடியது.
இந்தப் படுபாதகச் செயலால் யாழ். நகரமே நேற்று அதிர்ச்சியில் உறைந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் அவரசமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட போதும் சிகிச்சை பய னின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்தக் கோரச் சம்பவம் யாழ்.ஐந்து சந்தியில் பிற் பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ். ஒஸ்மானி யாக் கல்லூரி வீதியைச் சேர்ந்த அப்துல் காதர் நவாஸ் (வயது 56) என்பவரே உயிரிழந்தவராவர். இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
உயிரிழந்தவரின் மகனின் மனைவியை மகனின் நண்பர் சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். அது தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலை யிலேயே நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற் றுள்ளது.
சுமார் மூன்று பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த நவாஸ் என்பவரை ஓட்டுமடம் சந்தியினூடாகத் துரத்திச் சென்றனர்.
யாழ்.ஐந்து சந்தியில் வைத்து நவாஸ் மீது அசிட் மற்றும் கழிவு ஓயில் என்பவற்றை ஊற்றினர். தொடர்ந்து தாம் வைத்திருந்த கத்தி, வாள்களினால் நவாஸ் மீது தாறுமாறாக வெட்டினர். அவர் கீழே விழுந்த போது வலது கையில் வாளால் வெட்டினர். மணிக்கட்டுடன் கை துண்டாகியது. இரத்தம் பீறிட்டு வீதியை நனைத்தது.
உடனடியாக வாகனம் ஒன்றில் மயங்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றோம். இரு தரப்பினருக்குமிடையே ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பில் முரண்பாடு இருந்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது என்றார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நவாஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கைச் சுவாசம் கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடிய போதும் சிகிச்சை பயனின்றி சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்தார். சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நடு வீதியில் ஓட ஓட நபர் வெட்டிக் கொலை; குடாநாட்டில் நேற்றுப் பயங்கரம்
Reviewed by Admin
on
March 28, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment