கலாநிதி மனோகரக்குருக்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
எதிர்வரும் 31.03.2013 ஆம் திகதி நடக்க விருக்கும் கலாநிதி மனோகரக்குருக்களின் முதலாம் ஆண்டு குரு பூஜை தினத்தை முன்னிட்டு மன்னார் சிவபூமி மாவட்டத்தில் உள்ள அறநெறி பாடசாலைகளுக்கிடையிலேயான பேச்சுப்போட்டி, சமய அறிவு வினாடி வினாப் போட்டிகள் எதிர்வரும் 26.03.2013 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சித்தி விநாயகர் தேசிய பாசாலையில் நடைபெறவுள்ளது என கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது.
இப்போட்டியில் வெற்றியீட்டும் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும், மன்னார் மாவட்டத்தில் சமய சமூக பணிகளில் ஆத்மாத்தமாக செயற்பட்டு வரும் சேவையாளருக்கு கலாநிதி மனோகரக்குருக்கள் விருதும் வழங்க இருப்பதாக மன்றம் தெரிவித்துள்ளது. னை
கலாநிதி மனோகரக்குருக்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
Reviewed by Admin
on
March 25, 2013
Rating:

No comments:
Post a Comment