இனவாதத்துக்கு எதிராக மன்னாரில் ஹர்த்தால். படங்கள்
மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதோடு முஸ்ஸிம் மக்களது வர்த்தக நிலையங்கள்,சந்தைகள்,அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
.
முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினாவதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டித்து சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள்விடுத்திருந்தது. இதற்கமைவாகவே இன்று முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதே வேளை மன்னாரில் வங்கிகள்,பாடசாலைகள் போன்றவை வழமை போன்று செயற்படுகின்றது. அரச தனியார் போக்குவரத்துக்களும் இடம் பெற்று வருகின்றது. மன்னார் பஸார் பகுதியில் பொலிஸாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைதியான முறையில் மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனவாதத்துக்கு எதிராக மன்னாரில் ஹர்த்தால். படங்கள்
Reviewed by Admin
on
March 25, 2013
Rating:
No comments:
Post a Comment