அண்மைய செய்திகள்

recent
-

தீக்குளித்த தொண்டர் உயிரிழப்பு: ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக்க எனது உயிரே முதல்வாக்கு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் உயிரிழந்தார். 


கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். நேற்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியபடியே தமத் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப் பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்தோர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மிகவும் ஆபத்தான நிலைமையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி உயிரிழந்தார். முன்னதாக உயிருக்குப் போராடிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணி, 

'தனித் தமிழீழம் அமைய வேண்டும்- இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக இந்த உலகம் அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும். இதேபோல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிதி கிடைக்காமல் ஊழல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டனர். இதனால் ஊழலற்ற இந்தியா மலர வேண்டும். அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரது வலுவான லோக்பால் மசோதா கோரிக்கை நிறைவேறவும் எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என்றார்."

மணிக்கு சுலக்சனா என்ற மனைவியும், ஸ்ரீமதி என்ற மகளும், ஸ்ரீதர், ஸ்ரீபன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

 மனுவாக எழுதி வைத்திருந்த கடிதம்

இதற்கிடையில் சம்பவ இடத்தில் இருந்து மணி வைத்திருந்த மனுவாக எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தின் முதல் பக்கத்தில் ஈழ தமிழர்கள் வெல்லட்டும், இலங்கை அதிபர் ராஜபக்ச ஒழிக என்று எழுதப்பட்டு இருந்தது.

மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டில் கப்பல் கட்டும் துறையில் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது இந்தியாவின் நாட்டுப்பற்று என்னை கவர்ந்தது. இதனால் எனது வலது கையில் இந்தியன் என்றும், தேசிய கொடியையும் பச்சை குத்தி வைத்துள்ளேன். எனது உடலை தானமாக வழங்கியுள்ளேன். 26 முறை இரத்ததானம் கொடுத்துள்ளேன்.

சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை எதிர்த்து ஜனநாயக முறையில் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன். இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீதி வேண்டி வருகிற 11ஆம் திகதி கடலூர் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.

ஆனால் இதை சார்ந்த ஊழல் வாதிகள் அதற்கும் இடையூறு செய்து திசை திருப்பி விடுவார்கள். ஆகவே எனது மரணத்திற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மரணத்திற்கு பிறகு தான் சுனாமி வீட்டு ஊழலுக்கு உயிர்பிறக்கும் என்ற நம்பிக்கையில் என் ஜீவனை நான் அழித்துக் கொள்கிறேன்.

மேலும் இலங்கையில் 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும். அதற்காக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டும். மேலும் எனது ஈழ தமிழ் சமுதாயம் தனிநாடு பெற்று, எனது உயிரின் மக்கள் நன்றாக நல்வாழ்வு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.





எனது தாய், மனைவி, மகள், மருமகன், மகன்களுக்கு எத்தனையோ துன்பங்களை கொடுத்து விட்டேன். நீங்கள் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். எனது இறுதி சடங்கை தற்போது உள்ள வீட்டில் வைத்து என்மீது இந்திய தேசிய கொடியை போர்த்தி எடுத்து நல்லவாடு இடுகாட்டில் என்னை எரித்து என்நினைவாக சிறு கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.
தீக்குளித்த தொண்டர் உயிரிழப்பு: ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக்க எனது உயிரே முதல்வாக்கு Reviewed by Admin on March 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.