புத்தளம் நகரின் அமைச்சர் றிசாத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
புத்தளம் நகரின் பிரதான சுற்று வட்டத்தில் இடம்பெற்ற இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் நகரின் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நகர சபையின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் றிசாத், புத்தளம் நகரின் நகரின் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆகியோருக்கு எதிராகவும் சுலோகங்களினை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பப்பட்டது.
புத்தளத்தின் அபிவிருத்தியில் அமைச்சர் றிசாத் தலையிட வேண்டாம் எனவும் இதன்போது கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான சுற்று வட்டத்திலிருந்து குருநாகல் - புத்தளம் பிரதான வீதியின் ஊடாக நகரின் சுற்று வட்டம் வரை சென்று மீண்டும் புத்தளம் பஸ் தரிப்பு நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
புத்தளம் நகரின் அமைச்சர் றிசாத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Reviewed by Admin
on
March 05, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment