அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் அகாப்பே பூரண சுவிசேஷ சபைக்கு சர்வதேச அங்கீகாரம்.


மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பிரதேசத்தில் 1992 ல் இருந்து
இயங்கிவரும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு இதுவாகும். அகாப்பே (கடவுளின் அன்பு) எனும் பெயரில் இதன் நிறுவனரான போதகர் வெள்ளி சந்திரன் அவர்களின் தலைமையின் கீழ் 1992 வது ஆண்டில் இருந்து இன்று வரை சுமார் 21 வருடங்களாக தனது கிறிஸ்தவ ரீதியான பணிகளை ஆற்றி வருகிறது.


மேலும், அகாப்பே கிறிஸ்தவ அமைப்பின் (ஜேர்மனி) மேற்பார்வையாளர் மதிப்பிற்குரிய பிஸப் ஜோன் அலன் நீல் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பல சமூக பணிகளையும் இவ் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

கடந்த வருடம் தேசிய கிறிஸ்தவ போதகர் ஐக்கியத்தினால் அரச அங்கிகாரத்தை பெற்றுக்கொண்டது. மேலும் 04.04.2013 அன்று அகாப்பே (ஜேர்மனி) சர்வதேச அமைப்பினாலும், 'எலியாவின் அப்பம்' சர்வதேச அமைப்பினாலும் சர்வதேச அங்கிகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அகாப்பே அமைப்பின் தலைவர் பிஸப் ஜோன் அலன் நீல் அவர்களின் அங்கிகாரத்துடனான சர்வதேச அங்கிகாரச் சான்றிதழும் பெற்றுள்ளது. இன்று இவ் அமைப்பாhனது தலைமன்னார் ஸ்டேசன், தலைமன்னார் எனும் முகவரியை தலைமையகமாக கொண்டு, மன்னார் மட்டுமல்லாது வவுனியா, அனுராதபுரம் ஆகிய இடங்களில் பல கிளைகளை நிறுவியும் இயங்கி வருகிறது.


- க.றிச்சட்சன் -

தலைமன்னார் பியர்.


தலைமன்னார் அகாப்பே பூரண சுவிசேஷ சபைக்கு சர்வதேச அங்கீகாரம். Reviewed by NEWMANNAR on April 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.