அண்மைய செய்திகள்

recent
-

சுரேஸ் எம்.பியிடம் 4 ஆம் மாடியில் 2 மணிநேரம் விசாரணை

.தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் நான்காம் மாடியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் இரண்டு மணிநேரம் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.


விசாரணைக்காக நான்காம் மாடிக்கு வருகைதருமாறு கடந்த 12 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பு உரிய காலத்தில் கிடைக்காமையினால் அன்றைய தினம் அவரால் நான்காம் மாடிக்கு செல்லமுடியவில்லை. இந்நிலையிலேயே இன்றையதினம்  காலை 10 மணிமுதல் 12 வரை  விசாரணை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

'யாழ்ப்பாணத்தில் இராணுவ மயமாக்கல்' என்ற தலைப்பில் 'டைம்ஸ் ஒப் இந்தியா'  என்ற இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய  செய்தி தொடர்பாகவே விசாரணை மேற்கொண்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ ரகசிங்களை வெளியிட்டுள்ளமை தொடர்பில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இராணுவ இரசியங்களை வெளியிடவேண்டும் என்ற தேவை எமக்கு இல்லை என்றும் தேர்தல் காலத்தில் இவ்வாறான விசாரணைகளை மேற்கொண்டு அரசாங்கம் எங்களை முடக்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளே இவ்வாறான விசாரணை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சுரேஸ் எம்.பியிடம் 4 ஆம் மாடியில் 2 மணிநேரம் விசாரணை Reviewed by NEWMANNAR on April 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.