மன்னார் முருங்கனில் நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.போக்குவரத்து பாதிப்பு(படங்கள் )
முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனைக்கு முன் இன்று காலை 9.45 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
-முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனைக்கு முன் ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற போதும் மக்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கு எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதனால் கொதிப்படைந்த மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-காலை 10 மணிமுதல் 11.40 மணிவரை மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதனால் சுமார் பல மணி நேரம் மன்னார்- மதவாச்சி பிரதான வீதியூடான போக்குவரத்துச் சேவைகள் பாதீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொலிஸாரும்,இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடனும் சம்பவ இடத்தில் நின்ற கத்தோழிக்க மதகுருக்களுடனும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.எனினும் மக்கள் எதற்கும் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடனும் மதகுருமாறுடனும் கதைத்தனர்.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க திருச்சபையினால் தயாரிக்கப்பட்ட கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் கையளித்தனர்.
இந்த நிலையில் மேலதிக அரசாங்க அதிபரும்,மன்னார் பொலிஸாரும் வழங்கிய வாக்குருதிகளையடுத்து மக்கள் அவ்விடத்தை விட்டு களைந்து சென்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது கத்தோழிக்க மதகுருமார்,மன்னார் நகர சபையின் தலைவர்,உறுப்பினர்,மன்னார் பிரதேச சபையின் உப தலைவர்,மன்னார் பிரஜைகள் குளுவின் தலைவர்,தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அதிகாரிகள்,பங்கு மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
(மன்னார் நிருபர்)
(19-04-2013)
மன்னார் முருங்கனில் நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.போக்குவரத்து பாதிப்பு(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
April 19, 2013
Rating:
No comments:
Post a Comment