டொலோவின் 8 ஆவது தேசிய மகாநாடு நாளை வவுனியாவில் ஆரம்பம்
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் 8 ஆவது தேசிய மகாநாடு நாளை 06 ஆம் திகதி மற்றும் நாளை மறுதினம் 07 ஆம் திகதி ஆகிய இரு தினங்களும் வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.
-நாளை 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கட்சியின் 7 ஆவது தேசிய மாநாட்டின் பதவியியல் தலைமைக்குழு ஒன்று கூடும்.மாலை 5 மணிவரை இடம் பெறும்.07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ரீதியில் 8 ஆவது தேசிய மாநாட்டிற்காண தெரிவுகள் இடம் பெறும்.
இதன் போது மாவட்ட ரீதியில் 72 பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.20 பேர் சர்வதேச ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். குறித்த 92 பேரும் கூடி 23 பேரை தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யவுள்ளனர்.
-இதன் போது 115 பொதுக்குழு அங்கத்தவர்களும் இணைந்து தலைவர்,செயலாளர் நாயகம்,பொருளாளர்,தேசிய அமைப்பாளர் உற்பட ஏனைய பதவி நிலைகளும் தெரிவுகள் இடம் பெறும்.
குறித்த தெரிவுகளுக்குப்பின் கடந்தகால,நிகழ்கால,எதிர்கால அரசியல் நிலமைகள்,கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படும்.
பொதுக்குழு அங்கத்துவர்களின் அபிப்பிராயங்கள்,கருத்துக்கள், அரசியல் தொடர்பான முன்மொழிவுகள் இடம் பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்படும் தலைவர் தலைமை பேருரையினை நிகழ்த்துவதோடு தெரிவு செய்யப்பட்ட செயலாளர் நாயகத்தினால் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட அரசியல் தீர்மானங்கள் வெளியிடப்படும்.
இதன் போது கட்சியின் முக்கி அங்கத்தவர்களின் உரைகளும் இடம் பெறும்.இந்த மாநாட்டிற்கு கட்சியின் அங்கத்தவர்களும்,ஆதரவாளர்களும் கலந்து கொள்ளுவதற்காண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.
டொலோவின் 8 ஆவது தேசிய மகாநாடு நாளை வவுனியாவில் ஆரம்பம்
Reviewed by Admin
on
April 05, 2013
Rating:

No comments:
Post a Comment