நானாட்டான் பிரதேச சபையின் அனுமதியின்றி நிதி ஒதுக்கீடு – செயலாளரின் மறுப்புஅறிக்கை
மன்னார் இணைய தளத்தில் 15.04.2013ந் திகதி நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் திரு.மரியதாஸ் றீகன் அவர்களால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக மறுப்புஅறிக்கை
நானாட்டான் பிரதேச சபையின் புதிய அலுவலக கட்டிடத்தின் வளவிற்கு மண் நிரப்புவது தொடர்பாக 22.11.2012ந் திகதிய சபைக் கூட்டத்தின் 4வது தீர்மானத்திற்கு அமைவாக மண் நிரப்புவதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு பிரதேச சபையின் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு வேலைகளுக்கான கூறுவிலைகள் கோரப்பட்டது.
இப் பிரதேச சபையின் கேள்விச்சபைக்கு கூறுவிலைகள் சமர்பிக்கப்பட்டபோது 2013ம் ஆண்டிற்கான பிரதேச சபையின் நிதிக் குழு தெரிவு செய்யப்படாமை காரணமாக நிதிக் குழுவின் அனுசரணையின்றி சிறு கேள்விச்சபையின் 03 உறுப்பினரான தலைவர் நானாட்டான் பிரதேச சபை ,கணக்காளர் நானாட்டான் பிரதேச செயலகம், தொழில்நுட்ப அலுவலர் நானாட்டான் பிரதேச சபை ஆகியோரினால் கூறுவிலைகள் ஆய்வு செய்யப்பட்டு, குறைந்த கேள்வி தெரிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மண் நிரப்புதல் வேலை நடைபெற்றுள்ளது.இது தொடர்பான சகல ஆவணங்களும் கோவையிடப்பட்டுள்ள என்பதுடன் இணைய தளத்தின் செய்தியைப் பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்களும் இவ் ஆவணங்களை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
எனவே இது தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் திரு.மரியதாஸ் றீகன் அவர்களால் குறிப்பிட்டது போன்று என்னால் தன்னிச்சையாக எவ்வித முடிவுகளும்; எடுக்கப்படவில்லை.என்மீது வீண்பழி சுமத்துவதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது
என இப் பிரதேச சபையின்
செயலாளர் திரு.பி.அந்தோனிப்பிள்ளை
ஆகிய நான் அறியத்தருகின்றேன்.
தொடர்புபட்ட செய்தி
நானாட்டான் பிரதேச சபையின் அனுமதியின்றி நிதி ஒதுக்கீடு – செயலாளரின் மறுப்புஅறிக்கை
Reviewed by Admin
on
April 17, 2013
Rating:
1 comment:
Mr Anthonipillai (the secretary of nanattan predeshiya saba) is a well known as a honest person in the nanattan, vankali and murunkan area and these accusation against him are totally in fault.
thumbs up to his honest feedback to the accusation.
Post a Comment