மடுவில் இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம்-ஒருவர் கொலை,மற்றொருவர் தூக்கிட்டு தற்கொலை.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் பிரான்சிஸ்(வயது-52) என்பவரும் அவருடைய மச்சானரான யூட் சகாய தாசன்(வயது-35) ஆகிய இருவரும் பணங்கள்ளு குடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜோசப் பிரான்சிஸ் என்பவர் பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மாலை 3 மணியளவில் சென்றுள்ளார்.
இவருடன் சென்ற மச்சானரான யூட் சகாய தாசன் என்பவர் அவருடன் சண்டையிட்டதோடு மண்வெட்டியை எடுத்து ஜோசப் பிரான்சிஸ் என்பவர் மீது தாக்கியதோடு அவர் கிலே விழுந்தவுடன் கழுத்தில் மண்வெட்டியினால் வெட்டியுள்ளார்.
இதன் போது ஜோசப் பிரான்சிஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் மச்சானரான யூட் சகாய தாசன் என்பவர் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் மடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது வரை சடலங்கள் மீட்கப்படாத நிலையில் சம்பவ இடத்திலேயே உள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஏன் எதற்காக சண்டையிட்டார்கள் என்ற விடையம் இது வரை வெளியாகவில்லை.
மேலதிக விசாரனைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மடுவில் இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம்-ஒருவர் கொலை,மற்றொருவர் தூக்கிட்டு தற்கொலை.
Reviewed by NEWMANNAR
on
April 17, 2013
Rating:

No comments:
Post a Comment