மன்னாரின் மறு மலர்ச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 18 குளங்கள் புனர் நிர்மானம் செய்ய நடவடிக்கை-மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்

-மன்னார் நகர சபையும்,டயஸ் போர லங்கா அமைப்பும் இணைந்து மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட 18 சிறு குளங்களை புனரமைப்பு செய்து மக்களின் பாவனைக்காக கையளிப்பது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ்,மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.குனசீலன்,டயஸ் போர லங்கா அமைப்பின் இயக்குனர் ஜெர்மி லியனுகே,மாவட்ட இணைப்பாளர் சிங்கிலேயர் பீற்றர் ,மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவிக்கையில்,,,
-மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள பாவனையில் உள்ள,பாவனைக்குற்படுத்த முடியாத 18 குளங்களை தெரிவு செய்து டயஸ் போர லங்கா அமைப்பின் உதவியோடு மன்னார் நகர சபை புனர் நிர்மானப்பணிகளை மேற்கொள்ளுவதற்காண நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் வருகை தந்த மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் எங்களிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.4 குளங்களை அடையாளப்படுத்தி அவற்றை முதலில் புனர் நிர்மானம் செய்து மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கும் படி கோரிக்கை விடுத்தனர்.அவற்றில் மன்னார் உப்புக்குளம் பிள்ளையார் கோயில் குளம்,உப்புக்குளம் வட்டக்குளம்,எழுத்தூர் தரவன் கோட்டை குளம்,எழுத்தூர் கோரைக்குளம் ஆகிய நான்கு குளங்களும் அடையாளப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த குளங்கள் தற்போது எந்த திட்டத்தின் கீழ் அமையப்பெற்று பராமறிக்கப்பட்டு வருகின்றது தொடர்பில் மன்னார் நகர சபை ஆராய்ந்து வருகின்றது.
மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு குறித்த குளங்களின் பயண்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்லோம்.
இந்த நிலையில் இது தொடர்பில் நகர சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதோடு குளக்காணிகளை பிடித்து வைத்தள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை மீட்டு மீண்டும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
இதே வேளை மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களை மென்மேலும் புனரமைப்புச் செய்து மக்களின் பாவனைக்கு விடுவதினால் ஏற்படக்கூடிய நண்மை,தீமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மன்னாரின் மறு மலர்ச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 18 குளங்கள் புனர் நிர்மானம் செய்ய நடவடிக்கை-மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்
Reviewed by NEWMANNAR
on
April 17, 2013
Rating:

No comments:
Post a Comment