குஞ்சுக்குளம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து கவனயீர்ப்பு சிரமதானப்பணியை முன்னெடுப்பு. {படங்கள் }
-குறித்த பாதையினை புனர் நிர்மானம் செய்து தரும்படி குறித்த கிராம மக்கள் பலதரப்பட அதிகாரிகளிடமும் அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போதும் அந்த கோரிக்கைகள் இது வரை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அணைவரும் ஒன்று திரண்டு நேற்று செவ்வாய்க்கிழமை முழு நாளும் கவனயீர்ப்பு சிரமதானப்பனி ஒன்றினை மேற்கொண்டு குறித்த பிரதான பாதையினை செப்பனிட்டுள்ளனர்.
அங்கு சிரமதானப்பனியில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,,,
சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இக்கிராமத்திற்கு செல்வதற்கு ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ளது. இந்த பாதையூடாக அருவி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதன் காரணத்தினால் இக்கிராமத்திற்காண ஒரே ஒரு தரைவழிப்பாதையும் மூடப்படுகின்றது.
அண்மைக்காலமாக இவ் ஆறு அடிக்கடி பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
குறிப்பாக இவ் ஏட்டுத்துருசு எனும் பாலம் 2002 ஆம் ஆண்டில் இருந்து பழுதடைந்து உள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு பார ஊர்திகள் செல்வது முற்றாக நிருத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த மக்களின் தொடர்புகள் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றது.எமது பிரதான தொழிலாக மண் அகழ்வு,விவசாயம் போன்ற தொழிலை செய்து வருகின்றோம்.
குறித்த வீதியில் உள்ள பிரச்சினையினால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதீப்படைந்துள்ளது.
மருத்துவ வசதியை பெற்றுக்கொள்ள வெளி இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நாங்கள் இந்த விடையம் தொடர்பாக பலதரப்பட்ட வர்களிடம் எடுத்தக்கூறினோம்.ஆனால் எவரும் எமக்கு உதவி செய்யவில்லை என அந்த மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லக்ஸ்டன் டி சில்வா தெரிவிக்கையில்,,,,
நான் இந்த கிராமத்தின் பங்குத்தந்தையாக உள்லேன்.நான் இந்த கிராமத்திற்கு வந்து இரண்டு வருடங்களை கடக்கின்றது.ஆனால் இந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த மக்கள் ஒவ்வெரு வருடங்களிலும் 6 மாதங்கள் கஸ்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.
-மழைக்காலங்களில் அந்த மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஏட்டுத்துருசு அமைந்துள்ள பிரதான பாலம் மக்கள் பயண் படுத்த முடியதா நிலையில் உள்ளனர்.
குறித்த ஏட்டுத்துருசு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கீழ் வருகின்றமையினால் எங்களினால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.
குறித்த சுருசு 2002 ஆம் ஆண்டு பாதீப்படைந்ததாக கூறப்படுகின்றது.
ஆனால் தற்போது வரை அது பாதீப்படைந்த நிலையில் உள்ளது.இது யாருடைய குறை பாடு என்று கூற முடியாது ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதீக்கப்பட்டு வருகின்றனர்.குறித்த வீதி பாதீப்பினால் இக்கிராம மக்கள் வாழ்வாதாரம்,கல்வி, போன்றவற்றில் பாரிய பின்னடைவை எதிர் நோக்கி வருகின்றனர்.
தமது தேவையைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அந்த மக்கள் உள்ளனர்.
இந்த பாதையினால் பயணிக்க முடியாத நிலையில் இந்த மக்கள் தொங்கு பாலத்தினால் செல்லுகின்றனர்.ஆனால் தொங்கு பாலத்தினால் நடந்து மட்டுமே செல்ல முடியும்.வாகனங்கள் செல்ல முடியாது.
தற்போது பிரதான பாதையூடாக ஆற்று நீர் பாய்ந்து கொண்டிருக்கின்றது.இதனால் எவருமே பயணிக்க முடியாத நிலை உள்ளனர்.
இந்த பாதை மக்களின் பாவனைக்கு உகந்தது இல்லை.
எனவே உரிய அதிகாரிகள் இந்த விடையத்தில் தலையிட்டு மக்களுக்கு சிறந்த போக்குவரத்தை மேற்கொள்ளுவதற்கு உரிய வீதியை அமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளுவதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லக்ஸ்டன் டி சில்வா மேலும் தெரிவித்தார்.
குஞ்சுக்குளம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து கவனயீர்ப்பு சிரமதானப்பணியை முன்னெடுப்பு. {படங்கள் }
Reviewed by NEWMANNAR
on
April 17, 2013
Rating:
No comments:
Post a Comment