அண்மைய செய்திகள்

recent
-

உதயன் பத்திரிகையின் பணியாளருக்கு அச்சுறுத்தல்


மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. (30-04-2013) யாழ் உதயன் பத்திரிகையின் அலுவலக பணியாளர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் பின் தொடர்ந்து வந்து அச்சுறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

 யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வரும் உதயன் பத்திரிகையினை மன்னாரிற்கு வினியோகிப்பதற்காக யாழ் உதயன் தலைமைக்காரியாலத்தில் இருந்து 'கப்'ரக வாகனத்தில் உதயன் பத்திரிக்கைகளுடன் மன்னாருக்கு வருகை தந்த உதயன் பத்திரிக்கையின் அலுவலக பணியாளரான பி.சுகிர்தன் (வயது-29) என்பவர் இன்று காலை மன்னார் வருகை தந்து உதயன் பத்திரிகையினை வினியோகித்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி செல்வதற்காக மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் கப் வாகனத்துடன் நின்றுள்ளார்.

 இந்த நிலையில் நம்பர்த்தகடு அற்ற நீல  நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முகத்தை மறைத்த தலைக்கவசத்தை அணிந்தவாறு குறித்த பணியாளரிடம் விசாரனைகளை மேற்கொண்டதோடு வாகனம் மற்றும் அவருடைய அடையாள அட்டை விபரங்களை பதிந்தவுடன் கொச்சைத்தமிழில் கதைத்து  விட்டுச் சென்றுள்ளார். பின் குறித்த பணியாளர் மன்னார் பிரதான பாலம் வழியாக யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது குறித்த இருவரும் அவரை சுமார் 50மீற்றர் தொலைவில் பின் தொடர்ந்து வருவதை கண்ட பணியாளர் வேகமாக சென்று தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள இராணுவ காவலரணுக்குள் ஓடிச் சென்று அங்கு நின்ற இராணுவத்தினரிடம் சம்பவத்தை தெரிவித்தனர்.

 இதன் போது நம்பர்த்தகடு இல்லாத நிலையில் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த குறித்த இரண்டு சந்தேக நபர்களும் திரும்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் உடனடியாக தள்ளாடி இராணுவ முகாமிம் பகுதிக்குச் சென்று நிர்க்கதியான நிலையில் அங்கு நின்ற உதயன் பத்திரிக்கையின் அலுவலக பணியாளரான பி.சுகிர்தன் (வயது-29) என்பவரை சந்தித்து நிலவரத்தை அறிந்து கொண்டதோடு ஆறுதல் கூறினர்.

 இந்த நலையில் காலை 11 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த பணியாளர் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த வின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். -இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உதயன் பத்திரிகையின் பணியாளருக்கு அச்சுறுத்தல் Reviewed by Admin on April 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.