மன்னாரில் இடம் பெறவுள்ள மே தினக்கூட்டத்தில் உழைப்பாளர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் அணி திரளுங்கள்-வினோ எம்.பி

உழைப்பாளர் உரிமைகளை வென்றிடும் தினமான இந்த மே தினம் எமது மக்கள் தமக்கான அரசியல் சுதந்திரத்தையும்,தங்களை தாங்களே ஆளும் அரசியல் உரிமையையும் வென்றெடுக்கும் உன்னத தினத்திலேயே உழைப்பாளர் எழுச்சி நாளாக முழுமை பெறும்.
-இந்த வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னாரில் இம்முறை ஏற்பாடு செய்துள்ள மே தினக்கூட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள்,விவசாயிகள் உற்பட சகச தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு குரல் கொடுக்க முன்வருமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
மன்னாரில் இடம் பெறவுள்ள மே தினக்கூட்டத்தில் உழைப்பாளர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் அணி திரளுங்கள்-வினோ எம்.பி
Reviewed by NEWMANNAR
on
April 30, 2013
Rating:

No comments:
Post a Comment