யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.தாவடிப் பகுதியில் பொதுமக்களையும், முன்னாள் போராளிகளையும் ஏமாற்றி பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி இருந்தார். குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பகுதியில் நிற்பதைக் அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த இளைஞரை பிடித்து கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞரிடம் இருந்து பல கையடக்கத் தொலைபேசிகள், சிம்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Reviewed by Admin
on
April 29, 2013
Rating:

No comments:
Post a Comment