அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தமிழ்- முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் எவ்வித அபிவிருத்தியும் இல்லை

யுத்தம் இடம்பெற்று 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் மன்னாரில் தமிழ்- முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் யுத்தகாலத்தில் இருந்ததைப் போலவே காட்சியளிக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் தமிழ்- முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் யுத்த காலத்தில் இருந்தவை போன்றே தற்போதும் காட்சியளிக்கின்றன.

 வடக்கின் வசந்தம் மற்றும் அபிவிருத்தி என்றெல்லாம் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் அங்கு எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. அம் மக்களுடைய வாழ்க்கை நிலையை பார்க்கும் போது கவலையாகவுள்ளது. அரசாங்கத்தில் பல முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.

அவர்கள் அங்கு வாழும் முஸ்லிம் மக்களின் தேவைகளைக் கூட பூர்த்திசெய்யாதுள்ளனர். இதேவேளை, மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தில் பொது மக்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் காணி இராணுவத் தேவைக்கும் உல்லாச விடுதிகள் நிர்மாணிப்பதற்கும் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வாழ்ந்த குடும்பங்கள் புத்தளம் அகதிமுகாமில் தான் தற்போதும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


 குறிப்பாக தமிழ்- முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி அரசியல் இலாபம் தேடும் நோக்கமே அங்கு இடம்பெறுகின்றது. இதனையே அண்மையில் அங்கு ஆலயத்தில் வைக்கப்பட்ட சொரூபங்களின் உடைப்பு எடுத்துக்காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தமிழ்- முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் எவ்வித அபிவிருத்தியும் இல்லை Reviewed by Admin on April 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.