அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் மன்னார் ஆத்திமோட்டையை சேர்ந்த ஒருவர் மரணம்!- சந்தேகத்தில் ஒருவர் கைது

பிரித்தானியாவில் மன்னார் ஆத்திமோட்டையை சேர்ந்த வைரமுத்து தியாகராஜா (56 வயது) என்பவர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெட்ஃபோர்ட் என்னும் இடத்தில் கடை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தனது கடைக்கு மேலே உள்ள தனது அடுக்குமாடி வீட்டிலே தலையில் பலத்த காயத்துடன் காணப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பில், மஜிஸ்திரேட் முன்பாக ஆஜர் செய்யப்பட்ட திலக் மோகன் ராஜ் (25 வயது) என்பவர் மீது கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை எதிர்வரும் திங்களன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல் 


பிரித்தானியாவில் மன்னார் ஆத்திமோட்டையை சேர்ந்த ஒருவர் மரணம்!- சந்தேகத்தில் ஒருவர் கைது Reviewed by NEWMANNAR on April 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.