அண்மைய செய்திகள்

recent
-

இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்

இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கிளிநொச்சிக்கு சென்ற இந்திய அபிவிருத்தி கூட்டு நிர்வாகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிறப்புச் செயலாளர் பி.எஸ் ராகவன் தெரிவித்துள்ளார்.


அதே வேளை போரினால் பாதிப்பிற்குள்ளான வட,கிழக்கு பகுதிகளின் மீள் கட்டுமானங்களுக்கான உதவிகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து வழங்குமென்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் பாதிப்புக்களை மேற்கொண்ட வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பணத்தினைக் கையளிக்கும் நிகழ்வு இன்று மதியம் 11 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.

 இந் நிகழ்வில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவினைச் சேர்ந்த சுமார் 1320 வர்தகர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பாக அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் வீதி, ரயில்வே பாதை, துறைமுகங்கள் புனரமைப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து என்று பல உதவிகளை இந்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்திற்குச் செய்து வருகின்றது.

 இவ்வாறான உதவிகள் பெரும்பாலும் யுத்தத்தினால் பதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கே அதிகமாக செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறான உதவிகள் இனிவரும் காலங்களிலும் செய்யப்படும். கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கான கப்பல் போக்குவரத்து தற்போது ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

இதே போன்று தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கான கப்பல் போக்குவரத்தும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும். இதனூடாக சிறிலங்கா இந்திய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் விரிவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் Reviewed by Admin on April 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.