இறுதி யுத்தத்தில் அனைத்தையும் இழந்த மக்கள் ஓலைக்குடிசைகளுக்குள் வாழும் உரிமையும் இன்று மறுப்பு-வினோ எம்.பி
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முள்ளியவளை மத்தி கிராம சேவையாளர் பிரிவில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு நேரில் சென்று பாதீக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எதிரியை இனங்காணமுடியாத வாறு கறுப்பு அரசியல்வாதிகளின் இரும்புத்திரை பாதுகாப்பில் நடாத்தப்படும் கொலைப்பயமுறுத்தல்களுக்கும்,வீடெரிப்புகளுக்கும் அரசாங்கம் முடிவு கட்ட வேண்டும். இறுதி யுத்தத்தில் அனைத்தையும் இழந்த மக்கள் ஓலைக்குடிசைகளுக்குள் வாழும் உரிமையும் இன்று மறுக்கப்படுகின்றது. இது அப்பிரதேசத்திலுள்ள ஏனைய மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போன்ற செயலாகும்.மக்களை அச்சமூட்டி,வெளியேற்ற திரை மறைவில் எடுக்கப்படும் முயற்சியின் ஆரம்பமே இது.
தமிழ் இனத்தின் காவலர்களாக நாலாண்டுகளுக்கு முன்னர் நாடகமாடி,வேடமிட்டவர்களும் இதன் பின்னணியில் இருப்பது தமிழர் நெஞ்சங்களில் வேதனை தரும் செயலாகும். அரசாங்கம் இது போன்ற நாசகார செயல்களில் ஈடுபடும் வன்முறையாளர்களையும்,அவர்களுக்கு துணை போபவர்களையும் பாதுகாப்பிலிருந்தும்,அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவதிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் அனைத்தையும் இழந்த மக்கள் ஓலைக்குடிசைகளுக்குள் வாழும் உரிமையும் இன்று மறுப்பு-வினோ எம்.பி
Reviewed by Admin
on
April 23, 2013
Rating:

No comments:
Post a Comment