அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் நாளை போத்தல் கள்ளுக்கு எதிராக கண்டனப்பேரணி

தலைமன்னார் கிராமம் மற்றும் அயல்கிராமங்களின் சீர் கேடுகளுக்கு காரணமாக இருக்கும் அடைக்கப்பட்ட போத்தல் கள்ளு குறித்த கிராமங்களுக்கு அனுப்ப அனுமதி கொடுக்க வேண்டாம் என கோரி நாளை வியாழக்கிழமை (25-04-2013) தலைமன்னார் கிராமத்தில் கண்டனப்பேரணி ஒன்று தலைமன்னார் கிராமம் வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைமையில் இடம் பெறவுள்ளது.



 நாளை காலை 9 மணியளவில் தலைமன்னார் கிராம ஆலய முன்றலில் ஆரம்பமாகும் குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தலைமன்னார் பொலிஸ் அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. -போத்தலில் அடைக்கப்பட்டுள்ள கள்ளு பெரும் பாதீப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதனால் பல இழப்புக்களையும்,குடும்ப வருமையையும்,சீர் கேடான வாழ்வையும்,சிறுவர்களின் கல்வியில் பாதீப்பையும்,குடும்ப பிரச்சினைகளுக்கு பெண்கள் முகம் கொடுக்க முடியாமல் துன்புருவதினையும் இக்கிராமங்களில் காணமுடிவதாக மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் தெரிவித்துள்ளது.

 குறித்த கிராமங்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவுள்ள போத்தல் கள்ளினை குறித்த கிராமங்களினுள் கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டாம் என தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாளை கண்டனப்பேரணி ஒன்றை நடாத்தவுள்ளதோடு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தலைமன்னார் பொலிஸ் அதிகாரியிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் தலைமன்னார் கிராமம் வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் தெரிவித்துள்ளது.
தலைமன்னாரில் நாளை போத்தல் கள்ளுக்கு எதிராக கண்டனப்பேரணி Reviewed by Admin on April 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.