மன்னார் பிரதேச விளையாட்டுப்போட்டியில் வெற்றிக்கிண்ணம் வழங்குவதில் பாராபட்சம்
அப்போட்டியின் போது மன்னார் அரசாங்க அதிபர், மாவட்ட பொறியியலாளர், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர் மாவட்ட விளையாட்டு அதிகாரி, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோரும் அங்கம் வகித்திருந்தனர். இந் நிகழ்வின் பரிசளிப்பு வைபவத்தின் போது சகல போட்டி நிகழ்வுகளுக்குமான கிண்ணங்கள் வழங்கப்பட்ட போதிலும் ஒட்டு மொத்த நிகழ்வுகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற பேசாலை சென் விக்டறிஸ் விளையாட்டுக் கழகத்துக்கான சம்பியன் கிண்ணம் வழங்கப்படவில்லை
இதற்கான காரணத்தை பிரதேச செயலாளரிடம் விக்டறிஸ் கழகம் விளக்கம் கோரிய போது எவ்வித விளக்கத்தையும் அவர் வளங்கவில்லை. இப் போட்டிகளில் பேசாலை சென் விக்டறிஸ் விளையாட்டுக் கழகம் 48 புள்ளிகளையும் சென் ஜோசப் விளையாட்டுக் கழகம் 46 புள்ளிகளையும் அதீத இறுதிப்புள்ளிகளாகப் பெற்றிருந்தது. மன்னார் பிரதேச விளையாட்டுப்போட்டிகளில் விளையாட்டு விதிகளுக்கேற்பவே, இவ் இறுதிப்புள்ளிகள் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திரு.செபஸ்ரியான் பிள்ளை அவர்களினால் கணிப்பிட்ட போதிலும் எவ்வித காரணமுமின்றி இறுதி கிண்ணம் வழங்குவதில் பாராபட்சம் காட்டியமை விசனத்துக்குரியது.
கிண்ணம் வழங்காமைக்கான காரணத்தை பல்தரப்பட்டவர்கள் விக்டறிஸ் விளையாட்டுக் கழகத்தினர், பார்வையாளர்கள், ஏனைய கழகத்தினர் பிரதேச செயலாளரிடம் விடாப்பிடியாக வினவிய போது இரண்டாம் இடம் பெற்ற சென் ஜோசப் விளையாட்டுக் கழகத்தினரால் தங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் என்றும் மூன்று வருடமாக அமுலில் உள்ள இப்புள்ளி வழங்கல் முறையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சிறு பிள்ளைத் தனமான பதிலினை வழங்கியமை மனவருத்தத்திற்குரியது
இதற்கான முறையீட்டு கடிதத்தை சம்பவ இடத்திலேயே பேசாலை சென் விக்டறிஸ் கழகத்தினர் பிரதேச செயலாளரிடம் கையளித்த போதும் அக் கடிதம் தூக்கி வீசப்பட்டமை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் மனமுடைந்த விளையாட்டு வீரர்கள் ஏனைய நிகழ்வுகளில் தங்களுக்கு கிடைத்த 6 வெற்றிக்கிண்ணங்களையும் பிரதேச செயலாளரிடம் காலடியில் தாரை வார்த்து விட்டு கண்ணீருடன் வீடு திரும்பினர் .
இச் சம்பவத்தை கேள்வியுற்ற பேசாலை கிராம மக்கள், விளையாட்டு ஆர்வலர்கள், நலன் வரும்பிகள் இக் கறை படிந்த துக்ககர சம்பவத்தை நினைத்து மன்னார் பிரதேச செயலகத்தின் மீது மிகவும் மனவருத்தத்துடன் கோபமாக பொங்கி எழுந்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்கள் மூலமும் பல்தரப்பட்ட பாராபட்சம் மூலமும் மன்னார் பிரதேச செயலகம் செயல்பட்டு வருகின்றமை மன்னார் விளையாட்டுக்களை பாதாளத்துக்குள் தள்ளிவிடும் என்பதை மன்னார் பிரதேச செயலாளரும், மன்னார் பிரதேச விளையாட்டு அதிகாரியும் புரிந்து கொள்ளவேண்டும்.
அடுத்த வருடமாவது தனிப்பட்ட மனிதனுக்கும் தனிப்பட்ட கழகத்திற்கும் பயந்து பக்கச்சார்பாக நடந்து கொள்ளவேண்டாம் என்பதை தங்களுக்கு அறிவுரையாக வழங்குகின்றோம்.என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
மன்னார் பிரதேச விளையாட்டுப்போட்டியில் வெற்றிக்கிண்ணம் வழங்குவதில் பாராபட்சம்
Reviewed by Admin
on
April 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment