அண்மைய செய்திகள்

recent
-

புதிய மின்சார கட்டணங்களை 17ஆம் திகதி அறிவிக்க நடவடிக்கை

மீளாய்வு செய்யப்பட்ட புதிய மின்சார கட்டணங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மக்கள் பயன்பாடு ஆணைக்குழு தெரிவிக்கின்றது. அதற்கான சகல நடவடிக்கைகளையும் ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைலவர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி சொய்சா குறிப்பிட்டார்.


புதிய மின் கட்டணங்கள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றையும் அடுத்த சில தினங்களில் மின்சார சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

 மின்சார கட்டண மீளாய்வு குறித்து மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளின் பிரகாரம் பரிந்துரை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

 மின்சார கட்டண மீளாய்வு குறித்து மக்களால் 200ற்கும் அதிகமான எழுத்துமூல யோசனைகளும் வாய்மூலம் 79 யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய மின்சார கட்டணங்களை 17ஆம் திகதி அறிவிக்க நடவடிக்கை Reviewed by Admin on April 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.