அண்மைய செய்திகள்

recent
-

அரச தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.news.lk ஹெக் செய்யப்பட்டுள்ளது. மேற்படித் தகவலை அரசாங்க திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.


 சுல்தான் பிரையின் Sultan Brain எனும் குழுவே இவ் ஹெக்கிங் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது. இவர்கள் தங்களை (kurdish elite security team) என அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர். sinhala.news.lk, webcast.news.lk, webcast.news.lk ஆகிய அனைத்தும் தற்போது செயற்படவில்லை.

 இதேவேளை அண்மையில் இலங்கை அரசின் 3 இணையத் தளங்கள் ஹெக் செய்யப்பட்டன. பங்களாதேஷைச் சேர்ந்த கிரே ஹெட் வகை ஹெக்கர் குழுக்களில் ஒன்றான எப்பிளேஷ் எவர் என்ற குழுவே இவ் ஹெக்கிங் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்தது.

 சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு reprimin.gov.lk, ஆளும் கட்சியின் பிரதம கொறடா govtwhip.gov.lk, தெயட்ட கிருள கண்காட்சி deyatakirula.gov.lkபோன்றவற்றின் உத்தியோகபூர்வ இணைய தளங்களே ஹெக் செய்யப்பட்டிருந்தது.

 இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்திய காரணத்தினால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுவதாக ஹெக்கர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அரச தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம் Reviewed by Admin on April 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.