அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேச சபையில் அனுமதியின்றி நிதி ஒதுக்கீடு

நானாட்டான் பிரதேச சபையின் அனுமதியின்றி புதிய அலுவலகம் ஒன்றிற்கு கிரவல் மண் பரப்புவதற்காக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காண நடவடிக்கைகள் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டமையினை சக உறுப்பினர்கள் சார்பாக தான் வண்மையாக கண்டித்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் மரியதாஸ் ரீகன் தெரிவித்தார்.


 இதற்காண விலை மனு கோரல் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சபையின் அனுமதியின்றி குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச சபையில் விலைமனு கோரல் சபை உள்ளது. குறித்த சபையில் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர்,இரண்டு உறுப்பினர்கள்,நானாட்டான் பிரதேச செயலக கணக்காளர்,தொழில்நுற்ப உதவியாளர்,பிரதேச சபையின் செயலாளர் என 7 பேர் கொண்ட நிர்வாக சபை உள்ளது.

 எனினும் உப தலைவருக்கும்,இரண்டு உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படாத நிலையில் பிரதேச சபையின் செயலாளர் இரகசியமான முறையில் குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்கு பிரதேச சபையின் சக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நானாட்டான் பிரதேச சபையில் 5 ஆயிரம் ரூபாவிற்கு மேல் வேளைத்திட்டங்களை மேற்கொள்ளுவதாக இருந்தால் சபையின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் 4 பேரும் தன்னிச்சையாக முடிவெடித்து குறித்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

 இதனை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்.எதிர்வரும் 18 ஆம் நாள் பிரதேச சபை கூட்டத்தில் இதற்காண உரிய பதிலை சமர்ப்பிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் மரியதாஸ் ரீகன் மேலும் தெரிவித்தார்.
நானாட்டான் பிரதேச சபையில் அனுமதியின்றி நிதி ஒதுக்கீடு Reviewed by NEWMANNAR on April 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.