புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்- செல்வம் எம்.பி
இது தொடர்பாக அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தற்போது நாட்டில் உள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்களின் வணக்கஸ்தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த வகையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் கடந்த புதன் கிழமை புதன் கிழமை இரவு 11 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
பல வருடங்கள் பழமை வாய்ந்த அந்த சொரூபம் யுத்த காலத்தில் கூட எவ்வித சேதங்களையும் சந்திக்கவில்லை. குறித்த பகுதியில் கத்தோழிக்க,இந்து மக்கள் வாழ்ந்து வருகின்ற வகையில் அந்த மக்களுக்கிடையில் வன்முறையினை கட்டவிழ்த்து விட இப்படிப்பட்ட சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே பொலிஸார் இந்த விடையத்தில் நீதியான விசாரனைகளை மேற்கொண்டு மக்களுக்கிடையில் பிரிவினை வாதத்தையும்,வன்முறையினையும் தோற்றுவிக்க குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்- செல்வம் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
April 19, 2013
Rating:
No comments:
Post a Comment