அண்மைய செய்திகள்

recent
-

அநீதிகளுக்கெதிராக எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக குரல் கொடுப்போம்


தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையானது மக்களின் அடிப்படை உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் சுயாதீனமான ஒரு அமைப்பு என்றும் இதன் அடிப்படையில் தான் எமது மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்;ளது எனவும் இவ் அமைப்பானது மன்னார் மாவட்டத்தில் பல்வேறுபட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சுனேஸ் சோசை தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அங்குராற்பணக்குழுக் கூட்டம்; நேற்று 18-04-2013 வியாழக்கிழமை மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச கட்டிடத்தில் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் .சுனேஸ் சோசை தலைமையில் இடம் பெற்றது.இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,

இவ் அமைப்பானது  2004 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரைக்கும் இயங்கி வருகின்றது. குறிப்பாக 2010ம் ஆண்டு தொடக்கம் கிட்டத்திட்ட450 அங்கத்தவர்களுடன் எமது அமைப்பானது இயங்கி வருகின்றது. 

பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் நலன் கருதி இவ்வமைப்பு ஆரோக்கியமான துயரமற்ற வாழ்கையினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அவர்களது அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக அவர்களது வாழ்கைத் தரத்தினை உயர்த்துவதற்குப் பங்களிப்பு செய்வதே எமது தொலை நோக்காகக் கொண்டு இவ் அமைப்பினை ஆரம்பித்துள்ளோம.

 அநீதிகளுக்கெதிராக எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக குரல் கொடுப்போம் என்பதில் சந்தேகம் இல்லை எனவும்  இவர் சுட்டிக்காட்டினார்.

  கூறிப்பாக இவ் வருடம் எமது திட்டத்திற்குள் உள் வாங்கப்பட்ட கிராமங்களில் காணப்படும் குடும்பதலமைத்துவ பெண்களுக்கு தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் குறிப்பாக இவர்கள் ஏனையவர்கள் போன்று சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் மற்றும் சந்தோசமானதொரு வாழ்கையினை வாழவேண்டியும் 250 பெண்களை தலமை தாங்கும் பெண்களுக்கான சுயதொழில் உபகரணங்களையும் வழங்குவதற்காக எண்ணியுள்ளோம் எனவும் கூறினார்.

இருதியாக  தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்  தலமை செயலக அதிகாரி அன்ரனி ஜேசுதாசன் அவர்கள்  தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார் மன்னார் மாவட்டத்திலே இவர்களின் பொது பணி எவ்வாறு காணப்படுகின்றது எனவும் கூறினார். 

தொடர்ந்து உரையாற்றிய மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு.ஆலம் இவ் அமைப்பானது எமது மீனச சமூகத்திற்கு மிகவும் அளப் பெரிய சேவையினை வழங்கி வருகின்றார்கள் எனவும் குறிப்பாக சிறு மீனவர்களின் உரிமை சார்ந்த விடயங்களில் அக்கறை கொண்டு செயற்படுவதுடன் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் செயற்ப்பாடுகளில் தங்களை அர்ப்பணித்து செயற்படுகின்றார்கள் என கூறினார்.

பின்னார் புதிய நிர்வாக சபை தெரிவு நடைபெற்றது. இதில் மொத்தம்  13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு இவ்வளவு காலமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை என இயங்கி வந்த எமது அமைப்பானது 18-04-2013 தொடக்கம் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையென பெயர் மாற்றப்பட்டு இயங்கும் எனவும் கூறப்பட்டது.
 
 
 இந்த  நிகழ்விற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்  தலமை செயலக அதிகாரி திரு.அன்ரனி ஜேசுதாசன் இ மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அருட் தந்தை செபமாலை அடிகளார் , மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளர்      அந்தோனி சகாயம் , மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் முஹமட்.ஆலம் மற்றும் மன்னார் மாவட்ட மீனச சங்கங்களின் தலைவர்கள்,முகாமையாளர்கள் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையினர் திட்டங்களை மையப்படுத்தும் கிராமங்களின் பிரதிநிதிகள் என 40 மேற்பட்ட அங்கத்தவர்கள் இன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


(மன்னார் நிருபர்)
அநீதிகளுக்கெதிராக எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக குரல் கொடுப்போம் Reviewed by NEWMANNAR on April 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.